கருப்பு சட்டை.. கருப்பு வேட்டி.. திராவிடத் தலைவனாக மாறிய சிவகார்த்திகேயன்.. பராசக்தி ஆடியோ லான்ச்!
சென்னை: போகிற போக்கை பார்த்தால் கூடிய சீக்கிரமே சிவகார்த்திகேயனும் அரசியலுக்கு வந்துவிடுவார் போல தெரிகிறது என ரசிகர்கள் பராசக்தி இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் வந்த கோலத்தை பார்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கண்டிப்பாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவாக சிவகார்த்திகேயன் பிரச்சாரம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடித்துள்ள பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து சிவகார்த்திகேயன் கொடுத்த கிராண்ட் என்ட்ரி காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவ தொடங்கியுள்ளன.
பராசக்தி ஆடியோ லான்ச்: கடந்த வாரம் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இந்த வாரம் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சாய்ராம் கல்லூரியில் கிராண்டாக நடைபெற்றது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் தமிழ் மொழிக்காக போராடிய மாணவர்களின் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் தான் இந்த படத்தின் மையக்கரு.
திராவிடத் தலைவன்: கருப்பு சட்டை, கருப்பு வேட்டியில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மேடைக்கு வரும் போது ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் திராவிடத் தலைவன் என்றே சிவகார்த்திகேயனை சோஷியல் மீடியாவில் அழைக்க ஆரம்பித்து விட்டனர். பராசக்தி படம் தமிழ் சினிமாவில் இந்த பொங்கலுக்கு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பராசக்தி vs ஜன நாயகன்: பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ட்ரிக்கர் செய்வது போல சிவகார்த்திகேயன் பேசுவாரா? அல்லது விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கும் பராசக்தி படத்துக்கும் போட்டியில்லை. பொங்கல் விடுமுறைக்கு 2 படங்களையும் பார்த்து கொண்டாடுங்கள் என சொல்வாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











