பொங்கலுக்கு ரெண்டு படம் வருது.. பராசக்தி ஆடியோ லான்ச்சில் ஜன நாயகன் பற்றி பேசிய சுதா கொங்கரா!
சென்னை: சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இன்று சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் மணிரத்னம் கலந்துக் கொண்டார். மேலும், பல திறமையான இயக்குநர்களும் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு சிவகார்த்திகேயனையும் படத்தையும் பாராட்டி பேசியுள்ளனர்.
ஆடியோ வெளியீட்டு விழா ஆரம்பித்த உடனே இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மொத்த பாடல்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விட்டார்.

இயக்குநர் சுதா கொங்கரா பேசும் போது, இந்த பொங்கலுக்கு ரெண்டு படம் வருது என ஜன நாயகன் படம் குறித்தும் பேசியது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
எல்லாமே மாஸ்டர் பீஸ்: இயக்குநர் சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் பெண்களாலும் முன்னணி இயக்குநராக மாற முடியும் என்பதை இறுதிச்சுற்று படத்தின் மூலமே நிரூபித்து விட்டார். சூர்யாவை வைத்து அவர் இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்று குவித்தது. பாலிவுட்டில் அக்ஷய் குமாரையே இயக்கிய சுதா கொங்கரா தற்போது பராசக்தி படத்தில் ஒன்றுக்கு 3 ஹீரோக்களை ஒரே படத்தில் இயக்கியுள்ளார். இந்த படமும் அவருக்கு மாஸ்டர் பீஸ் ஆகவே அமையும் என தெரிகிறது.

பொங்கலுக்கு ரெண்டு படம் வருது: இந்த பொங்கலுக்கு ரெண்டு படம் வருது. 2 படங்களும் நன்றாக ஓட வேண்டும். தியேட்டர் ஓனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டித் தர வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து நல்ல சினிமாக்களும் பெரிய படங்களும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரும் என எந்தவொரு ஈகோவும் இல்லாமல் ஜன நாயகன் படம் பொங்கலுக்கு வெளியாவதையும் அந்த படமும் வெற்றிப் பெற வேண்டும் என்றும் சுதா கொங்கரா பேசியதை கேட்ட ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
படம் வெளியாகுமான்னு கேட்டாங்க: பராசக்தி படம் ஒரு கட்டத்தில் எடுக்க முடியுமா என்கிற எண்ணத்தை தோற்றுவித்தது. ஆனால் தற்போது படம் முடிவடைந்து ரிலீஸ் ஆகப்போகிறது. அதற்குக் காரணம் இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் முதல் டெக்னீசியன்கள் வரை எல்லோரின் சக்தி தான்.
திருச்சியிலிருந்து ஒரு தியேட்டர் அதிபர், இந்தப்படம் ரிலீஸ் ஆகி விடுமா? கோர்ட் கேஸ் என்றெல்லாம் சொல்கிறார்களே என்று கேட்டார். நிச்சயம் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும். இந்தப் படத்தை நீங்கள் தான் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று சொன்னேன் என்றும் சுதா கொங்கரா பேசியுள்ளார். பராசக்தி படத்துக்கும் தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











