Parasakthi Day 4 Box Office - பராசக்தி 4வது நாள் வசூல் இவ்வளவுதானா?.. பாக்ஸ் ஆஃபிஸ் தள்ளாடுதே..
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் கடந்த பத்தாம் தேதி பிரமாண்டமாக வெளியானது. பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது பாராட்டை தெரிவித்தார்கள். அதேசமயம் படத்துக்கு சில மோசமான விமர்சனங்களும் வரத்தான் செய்தன. இந்நிலையில் படம் வெளியாகி நான்கு நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, பிருத்வி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் பராசக்தி. எப்போதும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தரமான படம் கொடுக்கும் வழக்கம் உடைய சுதா; இந்தப் படத்தையும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தை மையமாக வைத்துதான் உருவாக்கியிருக்கிறார்.இதுதான் படத்தின் ஒன்லைன் என்று தெரிந்ததுமே படத்தை பார்த்துவிட தமிழ்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
பத்தாம் தேதி ரிலீஸ்: முதலில் ஜனவரி 14ஆம் தேதி (இன்று) ரிலீஸாவதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத வியாபார காரணங்களால் பத்தாம் தேதிக்கு படம் வந்தது. அதுவும் சும்மா வரவில்லை; பல சென்சார் கட்டுகளோடும், மியூட்டுகளுடனும்தான் வந்தது. ஆனாலும் திட்டமிட்டபடி படத்தை வெளியிட வேண்டும் என்பதால் சென்சார் குழுவினர் சொன்ன அத்தனை திருத்தங்களையும் படக்குழு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

படம் எப்படி இருக்கு?: முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்தமாக கொண்டாடிவிட்டார்கள். படம் உணர்வுப்பூர்வமாகவும்; அதேசமயம் ஒரு சினிமாவுக்கு தேவையான அத்தனை அம்சங்களுடனும் இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறினார்கள். சிவகார்த்திகேயன், ரவி மோகன் என படத்தில் நடித்த அனைவரையுமே அவர்கள் பாராட்ட தொடங்கிவிட்டார்கள். இதனால் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்தார்கள்.
போகப்போக டல்: ஆனால் முதல் நாளில் இரண்டு காட்சிகள் முடிந்த பிறகு அடுத்தடுத்த காட்சிகளை பார்த்த ரசிகர்களோ புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஏகப்பட்ட ஹைப்புகளை ஏற்றிவிட்டார்கள். அந்த ஹைப்புகளோடு படம் பார்க்க சென்றால் அவ்வளவுதான்; இவ்வளவு சீரியஸான கதையில் எதற்கான காதல் காட்சியை எல்லாம் இயக்குநர் எடுத்து வைத்திருக்கிறார். இன்னும் பல சீன்களை வலுவாக எடுத்திருக்கலாம். இது மொக்கை இல்லை சுமார் ரகமான படம்தான் என போட்டு உடைத்துவிட்டார்கள்.
வசூல் விவரம்: விமர்சனங்கள் எல்லாம் அப்படி இப்படித்தான் வந்தன. அதேசமயம் வசூலில் குறை சொல்லும்படி எதுவும் இல்லை. Sacnilk இணையதளம் வெளியிட்டிருந்த தரவுகள் படி முதல் நாளில் 12.5 கோடி ரூபாயையும், இரண்டாவது நாளில் 10.10 கோடி ரூபாயையும் வசூலித்ததாக கூறப்பட்டது. ஆனால் மூன்றாவது நாளில் ஒட்டுமொத்தமாக சரிந்து வெறும் 3 கோடி ரூபாயைத்தான் வசூலித்ததாம். நான்காவது நாளான நேற்று அதிலிருந்தும் சரிந்து வெறும் 2.40 கோடி ரூபாயைத்தான் இந்தியாவில் வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. ஆகமொத்தம் அந்த தளம் கொடுத்த தரவுகள்படி நான்கு நாட்களில் 28 கோடி ரூபாயை இந்தியாவி படம் வசூலித்திருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











