Parasakthi Box Office: நோ ஜனநாயகன்.. பாக்ஸ் ஆபீஸை பந்தாடும் பராசக்தி.. முதல் நாள் வசூல் கணிப்பு!

சென்னை: இந்த பொங்கலுக்கு ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்களுக்கு இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை குழு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு காரணமாக வரும் ஜனவரி 21ம் தேதி வரை ஜனநாயகன் வெளியாவது சந்தேகம் ஆகியுள்ளது.

உச்சநீதிமன்றத்துகே சென்றாலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்று சட்ட ஆலோசகர்கள் கூறி வருகின்றனர். ஜன நாயகன் விலகிய நிலையில், பராசக்தி படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.

Parasakthi Box Office Day 1 Predictions are here Sivakarthikeyan will get a huge blockbuster
Photo Credit:

பிரபாஸின் தி ராஜாசாப் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ள நிலையில், பராசக்தி படத்தை நம்பியே அனைத்து தியேட்டர்களும் உள்ளன.

அமரன் படத்தின் முதல் நாள் வசூல்: இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டி அமரன் படம் தான் முதலிடத்தில் உள்ளது. அந்த படம் முதல் நாளில் 21 - 23 கோடி வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பராசக்தி படம் பொங்கல் விடுமுறையை டார்கெட் செய்து இன்று தமிழ்நாட்டில் சோலோ ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், முதல் நாள் வசூல் 30 கோடி வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parasakthi Box Office Day 1 Predictions are here Sivakarthikeyan will get a huge blockbuster
Photo Credit:

50 மில்லியன் வியூஸ் போல: விஜய்யின் ஜன நாயகன் படத்தின் டிரைலருடன் போட்டியிட்டு வெளியான பராசக்தி திரைப்படத்தின் டிரைலர் 50 மில்லியன் வியூஸை கடந்து முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில், ஜன நாயகன் படத்துடன் போட்டி இல்லாமல் பராசக்தி வெளியான நிலையில், முதல் நாளில் 50 கோடி வசூல் என்கிற பாக்ஸ் ஆபீஸ் போஸ்டர் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

300 கோடி வசூல் வருமா?: சென்சாரில் 25 கட்கள் கொடுத்து படத்தின் வீரியத்தை சென்சார் போர்டு குறைத்துள்ள நிலையில், விமர்சன ரீதியாக பராசக்தி வெற்றியடைந்தால் அமரன் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் உறுதி என்கின்றனர். விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகாத நிலையில், தியேட்டர் ஓனர்களை இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் தான் காப்பாற்ற வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X