Parasakthi Day 8 Box Office - பராசக்தி 8வது நாள் வசூல் தெரியுமா?.. 2வது வாரத்திலும் கெத்து காண்பிக்குதே

சென்னை: சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. கடந்த பத்தாம் தேதி ரிலீஸான படத்துக்கு அப்படி இப்படி விமர்சனங்கள் வந்தாலும்; வசூலில் டீசன்ட்டான நம்பரை நோக்கி படம் பயணிப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்திலிருந்து கூறப்படுகிறது. இந்நிலையில் ரிலீஸாகி இரண்டாவது வாரத்தின் முதல் நாளான நேற்று படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதீத ஆர்வத்துடன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் முதல் நாள் இரண்டாவது காட்சியிலிருந்தே படம் சுமார்தான் என சொல்ல தொடங்கிவிட்டார்கள். அந்தப் பேச்சு நாளாக நாளாக அதிகமாகிக்கொண்டே சென்றது. இதனால் தியேட்டர்களில் கூட்டம் குறையலாம் எனவும் கணிக்கப்பட்டது.

புலம்பிய சுதா: படத்துக்கு அதிகமாக வந்த நெகட்டிவ் விமர்சனங்களை பார்த்து பதறிய சுதா கொங்கரா; ஒரு பேட்டியில், 'ஒரு நடிகரின் ரசிகர்கள் ஒளிந்துகொண்டு இப்படி நடந்துகொள்கிறார்கள்' என பேசியிருந்தார். அவர் அந்தப் பேச்சில் விஜய்யின் ரசிகர்களைத்தான் அப்படி சொல்கிறார் என சர்ச்சை எழுந்தது. அந்தப் பேட்டியை வைத்து சுதா கொங்கராவையும் சோஷியல் மீடியாவில் விமர்சிக்க தவறவில்லை நெட்டிசன்கள். சுதா இதற்கு பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளவில்லை.

Parasakthi Box Office Day 8 Sivakarthikeyan Film Earns 4 85 Cr Total 46 Crores in india
Photo Credit:

ரசிகர்கள் புலம்பல்: இது ஒருபக்கம் இருக்க பராசக்தி படம் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்த்திருந்த எஸ்கே ரசிகர்களுக்கு பராசக்தி பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ராவான கதையை சர்க்கரை பொங்கல் போல் சுதா கொங்கரா கொடுத்துவிட்டார்; சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் ஆகியோரின் நடிப்பும், ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும், பாடல்களும் மட்டும்தான் ஆறுதன் எனவும் புலம்புகிறார்கள்.

வசூல் நிலவரம்: விமர்சனங்கள் அப்படி இப்படி வந்தாலும் படத்துக்கு வசூல் டீசன்ட்டான நிலைமையையே கொடுத்திருக்கிறது. முதல் இரண்டு நாட்களிலேயே 51 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் அதற்கு பிறகு இத்தனை நாட்கள் ஆகியும் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. அதேசமயம் Sacnilk இணையதளம் தினமும் படத்தின் வசூல் குறித்த தகவலை அப்டேட் செய்துவருகிறது. அந்தவகையில் இரண்டாவது வாரத்தின் தொடக்க நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் பற்றிய தரவுகள் வந்திருக்கின்றன.

வசூல் இதுதானா?: அதன்படி நேற்று இப்படம் இந்தியாவில் மட்டும் 4.85 கோடி ரூபாய் வசூலித்து; எட்டு நாட்களில் 46 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இது அமரன் படத்தின் ஆரம்பக்கட்ட வசூலைவிட கம்மிதான் என்பது குறிப்பிடத்தக்கது. போகிற போக்கை பார்த்தால் 100 கோடி ரூபாயை பராசக்தி வசூலிக்க வாய்ப்புகளே இல்லை என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X