Parasakthi Day 9 Box Office - பராசக்தி 9வது நாள் வசூல் இதுதான்.. பாக்ஸ் ஆஃபிஸில் இன்னும் தீ அணையல

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. உணர்வுப்பூர்வமான கதையை இப்படி இயக்குநர் அவரது ஸ்டைலில் எடுக்கிறேன் என்கிற பெயரில் சொதப்பிவிட்டாரே என்று நொந்துகொண்டார்கள். விமர்சனம் அப்படி இருந்தாலும் ரிலீஸாகி ஒன்பது நாட்கள் நிறைவடைந்தாலும் வசூலில் நல்ல இடத்திலேயே படம் இருப்பதாக தெரிகிறது.'

அமரன் மெகா ஹிட், மதராஸி சூப்பர் ஹிட் ஆகியவைகளுக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் பராசக்தி. 60களில் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தை சுதா கொங்கரா எடுத்தார். கதைக்களம் மனதுக்கு நெருக்கமானது என்பதால் இப்படத்தை தியேட்டர்களில் சென்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக இருந்தார்கள்.

சுமார் வரவேற்புதான்: அதன்படி கடந்த பத்தாம் தேதி படம் ரிலீஸானதும் படையெடுத்தார்கள் ரசிகர்கள். தரமான சம்பவத்தை செய்து; மறக்க முடியாத அனுபவமாக இப்படம் அமையும் என ஆர்வத்தோடு சீட்டில் அமர்ந்த ரசிகர்களுக்கு சுதா கொங்கரா ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தேவையில்லாத காதல் காட்சிகள், அலைபாய்ந்த திரைக்கதை என ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்துவிட்டார். இதன் காரணமாக சுமாரான வரவேற்பையே படம் பெற ஆரம்பித்தது.

Parasakthi Box Office Day 9 Sivakarthikeyan Film Holds Strong Despite Mixed Reviews
Photo Credit:

எஸ்கே, ரவி சூப்பர்: அதேசமயம் படத்தின் இரண்டு தூண்களாக அமைந்துவிட்டார்கள் சிவகார்த்திகேயனும், ரவி மோகனும். எஸ்கே ஹீரோவாக கலக்க; வில்லனாக ரவி மோகன் மிரட்டிவிட்டார். இரண்டு பேருக்குமான சண்டை காட்சிகள் எல்லாம் உலக தரத்தில் இருந்தன. இந்த காம்போ மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கிவிட்டார்கள். சுமார் வரவேற்பு பெற்ற பராசக்தி படத்தில் இவர்கள் இரண்டு பேரும்தான் சூப்பர் மார்க் வாங்கினார்கள்.

வசூல் நிலவரம்: ஆகமொத்தம் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் கலவையான விமர்சனத்தை பெற்றுவிட்டது. இது படக்குழுவுக்கு கண்டிப்பாக அப்செட்டைத்தான் கொடுத்திருக்கும். அதேசமயம் வசூலில் நல்லவிதமான ரெஸ்பான்ஸையே படம் பெற்றுள்ளது. முதல் இரண்டு நாட்களிலேயே 51 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

9வது நாள் வசூல்: இந்நிலையில் படம் வெளியாகி நேற்றோடு ஒன்பது நாட்கள் நிறைவடைந்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க ஒன்பதாவது நாள் வசூல் மற்றும் ஒன்பது நாட்களில் இந்தியாவில் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 9வது நாளான நேற்று அந்தப் படம் 2.90 கோடி ரூபாய் அள்ளியதாம். மொத்தம் ஒன்பது நாட்களில் இந்தியாவில் பராசக்தி 49 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அந்த தளம் சொல்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X