ஜனநாயகன் நிலைமைதான் பராசக்திக்குமா?.. இருந்தாலும் வழக்கு போடல.. எல்லாம் நம்பிக்கைதான்.. ரிலீஸாகுமா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளிலும் மும்முரமாக இறங்கியிருக்கிறது படக்குழு. ஆனால் இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என தெரிகிறது. எனவே இப்படமும் ஏற்கனவே அறிவித்த நாளில் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் பராசக்தி. இது அவருக்கு 25ஆவது படமாகும். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சிவாவுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்குநர் உருவாக்கியிருப்பதால்; என்ன மாதிரியான தாக்கத்தை பராசக்தி ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்திருக்கிறது.
உச்சக்கட்ட நம்பிக்கை: இப்படத்தின் மீது சிவகார்த்திகேயன் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார். அமரன் திரைப்படம் எப்படி தனது கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோ; அதற்கும் மேலே இப்படம் அமையும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாராம். ஆர்ட் ஃபிலிமாக மட்டுமில்லாமல் கமர்ஷியல் ரீதியாகவும் இதனை சுதா கொங்கரா உருவாக்கியிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

சென்சார் பிரச்னை: இது ஒருபக்கம் இருக்க மறுப்பக்கம் சென்சார் சான்றிதழ் பிரச்னை பராசக்திக்கும் தலை தூக்கியிருக்கிறது. அப்படத்துக்கு சென்சார் நடைமுறைகள் முடிந்துவிட்டதாகவும்; யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இதனால் அனைத்தும் முடிந்து படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் இப்போது புதிய தகவல் ஒன்று வந்திருக்கிறது.
இதற்கும் இல்லை: அதாவது பராசக்தி படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழை அதிகாரிகள் கொடுக்கவில்லையாம். சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட படத்தை பார்த்து; அவர்கள் சில மாற்றங்களை சொன்னதாகவும்; அதை செய்து மறு ஆய்வு கமிட்டிக்கும் படத்தை படக்குழுவினர் அனுப்பினார்களாம். ஆனால் இன்னும் அவர்கள் சான்றிதழ் வழங்கவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் நிச்சயம் இன்று சர்ட்டிஃபிக்கேட் கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பத்தாம் தேதி ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறது படக்குழு.
ஜனநாயகன் ரிலீஸ் இல்லை: இதற்கிடையே விஜய்யின் ஜனநாயகன் ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் அப்படத்தை இரண்டு முறை பார்த்தும் சென்சார் அதிகாரிகள் சான்றிதழை வழங்கவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. எனவே ஒன்பதாம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் நீடிப்பதால்; அந்தத் தேதியிலிருந்து ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். பராசக்திக்கும் இன்னமும் சான்றிதழ் வராததால் ஒருவேளை அதுவும் பத்தாம் தேதி ரிலீஸிலிருந்து தள்ளிப்போகுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஒருவேளை சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இப்படமும் ரிலீஸாகாமல் போனால் கண்டிப்பாக இந்தப் பொங்கல் தமிழ் திரைத்துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழ்நாட்டில் மாயாஜால் உள்ளிட்ட சில தியேட்டர்களில் மட்டும்தான் பராசக்தி புக்கிங் ஆரம்பித்திருக்கிறது. அதுவும் பெரிதாக நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











