ஜனநாயகன் தீர்ப்பு வந்ததும்.. பராசக்தி சென்சார் அப்டேட் வருமா?.. அமைதி காக்கும் ஆகாஷ் பாஸ்கரன்?
சென்னை: விஜய்யின் ஜன நாயகன் படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. இந்நேரம் தளபதி ரசிகர்கள் டிக்கெட் கிடைக்கவில்லையே என்று தியேட்டர் தியேட்டராக அழைந்தும் வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் படம் வெளியாகி FDFS கொண்டாட்டத்தை களைகட்டியிருப்பார்கள்.
ஆனால், அனைத்துக்கும் தணிக்கை குழு மொத்தமாக ஆப்பு வைத்து விட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா இன்று காலை 10.30 மணிக்கு ஜன நாயகன் படத்தின் தணிக்கை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளார்.

ஜன நாயகன் படத்துக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தால், தணிக்கை குழு அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தை அணுகுவார்களா? அல்லது தணிக்கை குழுவுக்கு சாதகமாக வந்தால் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்வார்களா? என்கிற பிரச்னை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஜன நாயகன் படத்தை போலவே இன்னமும் சென்சார் கிடைக்காத பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் படம் கண்டிப்பாக 10ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
ஜன நாயகன் தீர்ப்புக்காக வெயிட்டிங்: பராசக்தி படத்துக்கு எப்படியோ நேற்று இரவே தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும். படம் திட்டமிட்டபடி நாளை உலகம் முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், ஜன நாயகன் தீர்ப்புக்காக தணிக்கை குழு காத்திருக்கிறார்களா? அல்லது டான் பிக்சர்ஸ் காத்திருக்கிறதா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
வழக்கு போடாத பராசக்தி படக்குழு: தணிக்கை குழு பராசக்தி படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி உள்ள நிலையில், அங்கேயும் ஏகப்பட்ட கட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், 15 காட்சிகளை நீக்க வேண்டும் என சொன்ன நிலையில், அதற்கு இயக்குநர் சுதா கொங்கரா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரிவைசிங் கமிட்டியை எதிர்த்து பராசக்தி படக்குழு வழக்கு கூட இன்னும் ஏன் போடாமல் சில தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங்கை ஓபன் செய்து வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்வியையும் விஜய் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இன்று தெரிந்துவிடும்: ஜன நாயகன் படத்திற்கான தீர்ப்பு வெளியான பிறகே பராசக்தி படத்துக்கான சென்சார் அறிவிப்பு வெளியானால், அதன் பின் உள்ள உள்குத்து என்னவென்பது இன்று தெரிந்துவிடும் என்றும் கூறுகின்றனர். ஒருவேளை ஜன நாயகன் படத்தை போல பராசக்தி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால், இந்த பொங்கல் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் பொங்கலாக மாறிவிடும்.


Click it and Unblock the Notifications











