வாழை இலை பிரியாணிக்கே ஸ்பூனா?.. மரியாதையே போச்சு.. பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா இப்படி சிக்கிட்டாரே

சென்னை: இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கி கவனம் ஈர்த்த சுதா கொங்கரா கடைசியாக பராசக்தி படத்தை இயக்கினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வந்த படம் புஸ்வானமாகி போனது. படம் பெற்ற சுமார் வரவேற்பு ஒருபக்கம் இருக்க; இன்னொரு பக்கம் அவரை சோஷியல் மீடியாக்களில் கடுமையாக விமர்சித்தும், ட்ரோல் செய்தும் வருகிறார்கள் ரசிகர்கள்.

மணிரத்னம், பாலா ஆகியோரிடம் சினிமா தொடர்பான வேலைகளை கற்றுக்கொண்டு துரோகி படத்தின் மூலம் இயக்குநர் பயணத்தை ஆரம்பித்த சுதா கொங்கராவுக்கு; இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தன. அந்த இரண்டு படங்களை பார்த்த மற்ற நடிகர்கள் எப்படியாவது சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த ஆசை சிவகார்த்திகேயனுக்கும் வர; பராசக்தி படத்தில் கமிட்டானார்.

Parasakthi Controversy Sudha Kongara Faces Heavy Trolling After Sivakarthikeyan s Viral Reply
Photo Credit:

பெரிய எதிர்பார்ப்பு: ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் அறுபதுகளில் நடந்த மாணவர் போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்து பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்தார் சுதா கொங்கரா. ரவி மோகன் வில்லனாக நடிக்க; ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். எப்படியும் தரமான சம்பவத்தை செய்யும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் நினைத்ததற்கு மாறாக குறைவான வீரியத்துடன் படத்தை டெலிவர் செய்துவிட்டார் இயக்குநர். விமர்சன ரீதியாக டல்லடித்தாலும் வசூலில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

சிக்கிய சுதா கொங்கரா: படம் ரிலீஸான சில நாட்களில் அவர் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், 'ஒரு நடிகரின் படம் ரிலீஸாகததால் அவரது ரசிகர்கள் வேண்டுமென்றே பராசக்தி படத்துக்கு எதிராக இணையத்தில் நெகட்டிவிட்டியை பரப்புகிறார்கள்' என்று கூறினார். அவர் விஜய்யின் ரசிகர்களைத்தான் மறைமுகமாக தாக்குகிறார் என சொல்லி தளபதி ரசிகர்கள் எல்லாம் அவருக்கு எதிராக பதிவுகளையும், கமெண்ட்ஸ்களையும் போட தொடங்கினார்கள்.

எஸ்கே கொடுத்த பல்பு: ஒருவழியாக அந்த விவகாரம் முடிந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பராசக்தி மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் கதையை சிவகார்த்திகேயன் வாசிக்கமாட்டார். மணிரத்னத்துடன் பணியாற்றியதால் ரவி மோகன் படிப்பார் என்று சுதா சொல்ல; உடனே எஸ்கேவோ, 'என் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தது போல் பேசாதீர்கள். அமரன், மதராஸி என அனைத்து படங்களின் கதைகளையும் நான் படித்துதான் வேலை செய்தேன். ஜாலியாக இருப்பதால் வேலை செய்யவில்லை என்று அர்த்தமில்லை. வாசிப்பையே நீங்கள்தான் கண்டுபிடித்தது போல் பேசுகிறீர்கள்' என ஒரே போடாக போட்டார்.

வாழை இலை பிரியாணிகே ஸ்பூனா?: இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் சென்சேஷனல் ஆனது. தன்னை மட்டம் தட்ட பார்த்த சுதாவுக்கு எஸ்கே தரமான பதிலடியை கொடுத்துவிட்டார் என பலரும் கூறினார்கள். இந்நிலையில் இன்னொரு வீடியோவை எடுத்து போட்டும் அவரை வெளுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதாவது பராசக்தி ஷூட்டிங்கின்போது படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து வைத்தார். வாழை இலையில் அந்த விருந்து பரிமாறப்பட்டது. எஸ்கேதான் பரிமாறினார்.

எல்லோரும் கைகளில் சாப்பிட சுதாவோ அதை ஸ்பூன் வைத்து சாப்பிட்டார். இதை பார்த்த ரசிகர்களோ, உலகத்திலேயே வாழை இலையில் வைக்கப்பட்ட பிரியாணியை ஸ்பூனில் சாப்பிட்ட ஒரே ஆள் சுதாதான்; யாருமே இப்படி சாப்பிட்டு பார்த்ததே இல்லை. சுதாவால் வாலை இழை, பிரியாணிக்கு உள்ள மரியாதையே போய்விட்டது. இதிலேயே அவரது எலைட் தன்மை தெரிகிறது. அந்த எலைட் தன்மையோடுதான் எஸ்கேவையும் மட்டம் தட்ட பார்த்தார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதேசமயம் சுதாவின் ஆதரவாளர்களோ, உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பது அவரது உரிமை. இதையெல்லாமா கிண்டல் செய்வது என்றும் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X