Parasakthi Day 2 Box Office - பராசக்தி இரண்டாவது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் படம் கெத்துதான்

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் பல சென்சார் பிரச்னைகளை கடந்து கடந்த பத்தாம் தேதி வெளியானது. படத்துக்கு பெரும்பாலான ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தார்கள். அமரன் படத்துக்கு பிறகு எதிர்பார்த்தபடியே இதுவும் எஸ்கேவின் கரியரில் முக்கியமான படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் இரண்டு நாட்களில் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் பராசக்தி. இது சிவாவுக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பிருத்வி, சோமசுந்தரம், சேத்தன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் தனது 100ஆவது படமாக இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

நேற்று முன்தினம் ரிலீஸ்: படத்துக்கு சென்சாரில் சிக்கல்கள் எழுந்தன. அதிகாரிகள் சொன்ன அத்தனை மாற்றங்களையும் செய்துவிட்டு; கடந்த பத்தாம் தேதி திட்டமிட்டபடி படத்தை இறக்கியது படக்குழு. ஜனநாயகன் படம் கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸிலிருந்து விலகிக்கொண்டதால் பராசக்திக்கு கூடுதல் திரையரங்குகள் கிடைத்தன. இந்த எதிர்பாராத சர்ப்ரைஸால் படக்குழுவினரும், எஸ்கேவின் ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியை அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Parasakthi Day 2 Box Office is 10 Crores in india SK 25th Film Turns Block buster
Photo Credit:

கொண்டாடும் ரசிகர்கள்: படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் பெரும்பாலானவர்களுக்கு பிடித்துப்போய்விட்டது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக உணர்வுப்பூர்வமாகவும், அதேசமயம் கமர்ஷியல் வேல்யூஸையும் விட்டுக்கொடுக்காமலும் இயக்குநர் படம் எடுத்திருப்பது தங்களுக்கு பிடித்திருப்பதாகவும்; திராவிட இயக்கங்களின் போராட்டத்தை தெரிந்துகொள்ள ஜென் ஸி தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் இந்தப் படம் அமைந்துவிட்டது என்றும் புகழ்கிறார்கள்.

கமல்ஹாசன் பாராட்டு: ரசிகர்கள் மட்டுமின்றி கமல்ஹாசனும் பராசக்தி படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார். இந்தப் படம் திமுகவின் கூட்டணிக்கு இட்ட வெற்றி திலகம் என்று கொண்டாடியிருந்தார். முக்கியமாக சிவகார்த்திகேயனும், ரவி மோகனும் இந்தப் படத்தின் மூலம் பெரிய பெயரை பெற்றுவிட்டார்கள். எஸ்கே படத்தின் பல இடங்களில் ஆக்‌ஷன் மட்டுமின்றி எமோஷனல் காட்சிகளிலும் சக்கைப்போடு போட்டிருக்கிறார். அதேபோல் ரவி மோகனோ வில்லத்தனமான நடிப்பில் கதிகலங்க வைக்கிறார். இப்படி பலரிடமிருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் சிலரிடமிருந்து நெகட்டிவ் விமர்சனங்களும் வரத்தான் செய்கின்றன.

வசூல் நிலவரம்: ஆனாலும் படத்தின் வசூலை பொறுத்தவரை பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. முதல் நாளில் Sacnilk இணையதள தரவுகள் படி இந்தியாவில் 12.50 கோடி ரூபாய் வசூலித்த பராசக்தி; இரண்டாவது நாளான நேற்று பத்து கோடியே 15 லட்சம் ரூபாய் வசூலித்து; மொத்தம் இரண்டு நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் கூறுகிறது. அதேசமயம் உலகம் முழுவதும் 27 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X