Parasakthi Day 3 Box Office - பராசக்தி 3வது நாள் வசூல்.. மொத்தமாய் படுத்துடுச்சே.. 100 கோடிக்கு நோ வாய்ப்பு
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்துவிட்டன. விமர்சன ரீதியாக பெரும்பாலும் ரசிகர்களால் படம் கொண்டாடப்பட்டது. வசூலிலும் சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸை பெற்ற சூழலில் மூன்றாவது நாளில் படம் செய்திருப்பதாக Sacnilk இணையதளம் குறிப்பிட்டிருக்கும் வசூல் தொகை ரொம்பவே கம்மியாக இருக்கிறது.
சூரரைப் போற்று படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கியிருக்கும் படம் பராசக்தி. இது சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படம், ஜிவி பிரகாஷுக்கு நூறாவது படமாகும். ஏற்கனவே சூரரைப் போற்று படத்துக்காக சுதா தேசிய விருதை வென்றிருப்பவர். எனவே சிவாவை வைத்டு முதன்முறையாக அவர் இயக்கியுள்ள பராசக்தி மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. போதாக்குறைக்கு படத்தின் கதை களமும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவர்கள் போராட்டம் பற்றியது.
பிரமாண்ட ரிலீஸ்: இப்படத்தை டான் பிக்சர்ஸ் தரப்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். இந்தப் பொங்கலுக்கு ஜனவரி ஒன்பதாம் தேதி விஜய்யின் ஜனநாயகன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படத்துக்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததன் காரணமாக ரிலீஸிலிருந்து தள்ளிப்போனது. எனவே அப்படத்துக்கென்று ஒதுக்கப்ப்ட்டிருந்த தியேட்டர்களிலும் பராசக்தி வெளியானது. மொத்தம் 700க்கும் மேற்பட்ட படங்களில் எஸ்கேவின் பராசக்தி வெளியானதாக கூறப்படுகிறது.

நல்ல ரெஸ்பான்ஸ்: எதிர்பார்த்தபடியே முதல் நாளில் படத்துக்கு ஏகோபித்த ஆதரவை கொடுத்தார்கள் ரசிகர்கள். இந்தக் கதை தங்களுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிவிட்டதாகவும்; இப்படிப்பட்ட படம் கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படம் போன்ற ஒரு ஃபீலை கொடுத்துவிடும். ஆனால் இயக்குநரோ ஜனரஞ்சக விஷயங்களையும் சேர்த்து தங்களை திருப்திப்படுத்திவிட்டதாக கொண்டாடினார்கள். முக்கியமாக சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகனின் நடிப்பு அப்ளாஸை அள்ளின.
மைனஸும் உண்டுதான்: படத்துக்கு ஒருதரப்பினர் தங்களது ஆதரவை கொடுத்தாலும் இன்னொரு தரப்பினர் விமர்சனத்தையும் முன்வைத்திருக்கிறார்கள். ஹிந்தி திணிப்புக்கு எதிராக இன்னும் வீரியமாக காட்சிகளை வைத்திருந்திருக்கலாம். ஸ்ரீலீலா - சிவகார்த்திகேயன் காதல் காட்சி எல்லாம் கதைக்குள் ஒன்றாமல் தனித்து தொக்கி நிற்கிறது போன்ற நெகட்டிவ் குரல்களையும் கேட்கத்தான் முடிகிறது. இருந்தாலும் படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பில்லை என்றே கருதப்பட்டது.
டல்லான வசூல்: Sacnilk இணையதள கூற்றுப்படி முதல் நாளில் அப்படம் 12.5 கோடி ரூபாயையும் இரண்டவது நாளில் 10.1 கோடி ரூபாயையும் வசூலித்ததாக தெரிகிறது. இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று படத்தின் வசூல் குறித்த தகவலை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று இந்தியாவில் வெறும் 2.75 கோடி ரூபாயை வசூலித்து மூன்று நாட்களில் மொத்தம் 25.35 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறுகிறது. அதேசமயம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 51 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











