Parasakthi 4th Day Box Office: பராசக்தி ‘செவ்வாய்க்கிழமை’ மற்றும் பொங்கல் விடுமுறை புக்கிங் எப்படி?
சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் RRR, புஷ்பா 2, கடந்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் கூலி, ரன்வீர் சிங்கின் துரந்தர், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து பல நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலை அதிகரித்துக் கொண்டே சென்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்துக்கும் கடுமையான விமர்சனங்கள் குவிந்த நிலையிலும், தொடர்ந்து ஒரு வாரமாவது படம் ஓடி 500 கோடி வசூலை அள்ளியது. ஆனால், அமரன் படத்துக்குப் பிறகே சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான போதே, 100 கோடி வசூலை ஈட்ட முடியவில்லை.

இந்நிலையில், ஜன நாயகன் படம் வெளியாகாமல் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியான பராசக்தி திரைப்படம் முதல் 2 நாட்கள் தவிர்த்து திங்கட்கிழமையே டல் அடித்த நிலையில், செவ்வாய்க்கிழமை டிக்கெட் புக்கிங் நிலமை ரொம்பவே மோசமாகி விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.
திமுக - காங்கிரஸ் பிரச்னை: விஜய்யின் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கப் போகிறதா? அதற்கு எதிராகவே திமுக அரசு பராசக்தி படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வெளியிட்டதா? என ஏகப்பட்ட அரசியல் சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சுதா கொங்கரா தமிழர்களின் போராட்டத்தை சொல்கிறேன் என்கிற பெயரில் அவரது தெலுங்கு பாசத்தையே அதிகம் திணித்து விட்டார் என்றும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
டல் அடிக்கும் பொங்கல் ரிலீஸ்: தியேட்டர்களின் விலைவாசி உயர்வு, ஓடிடிக்களின் வரவு உள்ளிட்டவை சமீப காலமாக தியேட்டர்களின் பிசினஸை ரொம்பவே கெடுத்து வருகின்றன. போதாக்குறையாக ஓடிடிக்கு சென்சார் இல்லாத நிலையில், தியேட்டர் பிசினஸை மட்டும் குறிவைத்து சென்சார் போர்டு தாக்கி வருவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. 25 இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டு பராசக்தியின் தீயை பரவ விடாமல் அணைத்து விட்ட நிலையில் தான் தியேட்டரில் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு உணர்ச்சியையும் கிளப்பாமல் காதல், ஆக்ஷன், பழிவாங்கல் டிராமாவாக மட்டுமே மாறிவிட்டது என சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் ரோஸ்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படங்களும் பெரிதாக வசூல் ஈட்டாத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் படமான பராசக்தி பாக்ஸ் ஆபீஸில் படுத்தே விட்டது என்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் விடுமுறை வரை: செவ்வாய்க்கிழமையை விட இந்த வாரம் பொங்கல் விடுமுறை நாட்களில் பராசக்தி படத்தின் டிக்கெட் கிடைக்காத அளவுக்கு ஒரு பெரிய நடிகரின் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாற்ற முடியாத அளவுக்குத்தான் உள்ளது. திங்கள், செவ்வாய் எப்படி இருந்ததோ தியேட்டர்கள், அதே போலத்தான் பொங்கல் விடுமுறை நாட்களான வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 2வது வாரமும் டல் அடித்து காணப்படுகின்றன. ஒரு சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மாலை நேரம் மற்றும் இரவு ஷோக்கள் ஆரஞ்சு நிறத்தில் பாதி அரங்கு நிறைந்து காணப்படுகின்றன.
100 கோடி வசூல் சாத்தியமா?: கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பயோபிக் படமான அமரன் படம் அளவுக்கு பராசக்தி வலுவான படமாக இல்லை என்பது தான் இங்கே மிகப்பெரிய சிக்கலாக மாறி நிற்கிறது. மதராஸி படத்தை போல 100 கோடி வசூலை அள்ள பராசக்தி இந்த வாரம் முழுவதும் போராடும் என்றே தெரிகிறது. 2 நாட்களில் 51 கோடி வசூல் ஈட்டிய பராசக்தி பொங்கல் விடுமுறைக்குள் 100 கோடி வசூல் செய்யவில்லை என்றால் தயாரிப்பு தரப்புக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











