Parasakthi Day 7 Box Office - பராசக்தி 7வது வசூல் எவ்வளவு தெரியுமா?.. சிவகார்த்திகேயன் மாஸ் கலெக்‌ஷன்

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருகும் பராசக்தி திரைப்படம் கடந்த பத்தாம் தேதி ரிலீஸானது. போட்டிக்கு வரவிருந்த ஜனநாயகன் ரிலீஸிலிருந்து தள்ளிப்போனதால் கூடுதல் திரையரங்குகளும் இப்படத்துக்கு கிடைத்தன. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் சூழலில் படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து சுதா கொங்கரா இயக்கியிருக்கும் படம் பராசக்தி. இதில் எஸ்கேவுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டி 60களில் நடந்த மாணவர் போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே படத்துக்கு தமிழர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இப்படம் தரமான சம்பவம் என்று கணிக்கப்பட்டிருந்தது.

சுமாரான வரவேற்பு: ஆனால் அதிக எதிர்பார்ப்பு சம்பாதிக்கக்கூடிய படங்கள் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தாது என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக மாறிவிட்டது பராசக்தி. எடுத்துக்கொண்ட கதைக்கள் வீரியமானது, உணர்வுப்பூர்வமான ஒன்று என்றாலும்; அதை ப்ரெசெண்ட் செய்த விதத்தில் சுதா கொஞ்சம் தடுமாறிவிட்டார் என்பதுதான் ரசிகர்களில் பலரின் கருத்தாக இருக்கிறது. ரொம்பவே எதிர்பார்த்துவிட்டோம் என அவர்கள் முதல் காட்சி முடிந்ததுமே சொல்லியதை கேட்க முடிந்தது.

Parasakthi Day 7 Box Office Collection is 4 Crores in india Sivakarthikeyan Film Earns 41 Crore in Week
Photo Credit:

என்ன சொதப்பல்?: அதாவது ஹிந்தி திணிப்புக்கு எதிரான படம் என்று ரிலீஸுக்கு முன்பு ப்ரோமோட் செய்யப்பட்டதால் முழுக்க முழுக்க அது ராவாக கொடுக்கப்பட்டிருக்கும் என நினைத்துவிட்டார்கள் பலரும். ஆனால் சுதாவோ அதில் காதல் காட்சிகளை எல்லாம் சேர்த்து சொதப்பிவிட்டார். சேர்க்கப்பட்ட காதல் காட்சிகளிலும் பெரிய அளவு ஈர்க்கும் விஷயங்கள் எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி திரைக்கதையிலும் சொதப்பிவிட்டார் என ஓபனாக கூறினார்கள்.

சுதாவின் குற்றச்சாட்டு: இதனால் இரண்டாவது நாளிலிருந்தே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொஞ்சம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் அந்த விமர்சனங்கள் எல்லாம் குறிப்பிட்ட நடிகர் ஒருவரின் ரசிகர்களால் திட்டமிட்டு பரப்பப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் கொடுத்திருந்த ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் அப்படி சொன்னதை அடுத்து இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படத்தை கொண்டாடியபோது மட்டும் சுதாவுக்கு ரசிகர்கள் இனித்தார்கள். இப்போது நெகட்டிவ் விமர்சனம் சொல்வதால் கசக்கிறார்களா என ஒருதரப்பினர் அவரை விளாசிவருகிறார்கள். எது எப்படியோ மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் சுமார் ஹிட்டானது திரைத்துறையில் பலருக்கும் ஏமாற்றம்தான்.

வசூல் நிலவரம்: இந்நிலையில் படம் வெளியாகி நேற்றோரு ஒரு வாரம் நிறைவடைகிறது. சூழல் இப்படி இருக்க ஏழாவது நாளான நேற்று மற்றும் ஒரு வாரத்தின் முடிவில் படம் செய்திருக்கும் வசூல் குறித்து Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று பராசக்தி 4.75 கோடி ரூபாய் வசூல் செய்ததாம். மேலும் ஒரு வாரத்தின் முடிவில் இந்தியாவில் மட்டும் அப்படம் இதுவரை மொத்தம் 41 கோடி ரூபாய் அள்ளியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒரு வாரத்தின் முடிவில் 50 கோடி அள்ளும் என நம்பப்பட்ட படம்; அதை நிறைவேற்றாதது எஸ்கே ரசிகர்களுக்கு சோகத்தை கொடுக்கக்கூடியதாகத்தான் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X