பராசக்தி ஹீரோ நான்தான்.. சீமான் அதிரடி.. ஆத்தாடி இவர் என்ன இப்படி கிளம்பிட்டாரு?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் ஓரளவுக்கு வரவேறபை பெற்றிருக்கிறது. இதுவரை இந்தியாவில் அந்தப் படம் 49 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக ஒரு தகவல் ஓடுகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான்; தான்தான் பராசக்தி பட ஹீரோ செழியன் என கூறியிருக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா, பிருத்வி என பலர் நடித்திருக்கும் படம் பராசக்தி. தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் ஹிந்தி திணிப்புக்கு எதிராக 60களில் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்தார் இயக்குநர். இயல்பிலேயே இதுமாதிரியான படங்களுக்கு தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். எனவே இதையும் தமிழ்நாட்டில் அதிகம் கொண்டாடுவார்கள் என எதிரிபார்க்கப்பட்டது.
சொதப்பிய இயக்குநர்: ஆனால் இந்த படத்தில் சுதா கொங்கரா மொத்தமாக சொதப்பிவிட்டார் என பலரும் கூறினார்கள். அதாவது உணர்வுப்பூர்வமான கதையை இயக்குநர் காதல் காட்சிகள் எல்லாம் ஓவர் டோஸாகவும், ரசிகர்களுக்கு செட் ஆகாதவாறும் எடுத்து ரொம்பவே சோதித்துவிட்டார் என சொல்லும் ரசிகர்கள், இதை ராவாக கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என கூறுகிறார்கள். அதேசமயம் ஜென் ஸி தலைமுறைக்கு தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள பராசக்தி திறவுகோலாக இருக்கும் எனவும் உறுதியளிக்கிறார்கள்.

வசூல் விவரம்: விமர்சகர்களின் பார்வையில் பராசக்தி சுமார்தான். இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய படம் என்றுதான் அழுத்தமாக கூறியிருக்கிறார்கள். எனவே விமர்சன ரீதியாக படம் கொண்டாடப்படவில்லை. அதேசமயம் வசூலில் படத்துக்கு டீசன்ட்டான வரவேற்புதான். இதுவரை 49 கோடி ரூபாய் படம் இந்தியாவில் வசூலித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 51 கோடி ரூபாயை இரண்டே நாட்களில் வசூலித்ததாக கூறிய பட தயாரிப்பு நிறுவனம்; அடுத்தக்கட்ட அப்டேட்டை வெளியிடவில்லை.
இது ஒருபக்கம் இருக்க அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அதை பராசக்தி திரைபட வசூல் முறியடிக்கும் என்றுதான் இப்பட அறிவிப்பு வந்தபோதெல்லாம் எஸ்கே ரசிகர்களின் கூற்றாக இருந்தது. அது கண்டிப்பாக நடக்காது என உறுதியாகிவிட்டது. இந்நிலையில் பராசக்தி படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் சூழலில்; இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
என்ன பேசினார்?: படம் பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பராசக்தி படத்தில் வரும் செழியன் கதாபாத்திரம் சீமான்தான். ஆம் சீமான்தான் செழியன். பெயர்தான் அப்படி வைத்துவிட்டார்கள். வாழ்த்துகள், எல்லோருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்தார். அவர் இப்படி பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகிவிட்டது.


Click it and Unblock the Notifications











