பராசக்தி படத்தை பார்த்து அவமானப்பட்ட நீதிபதி.. என்னங்க இப்படி நடந்து போச்சு?.. ஓபனாகவே சொல்லிட்டாரே
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியானது. படத்துக்கு சுமாரான விமர்சனங்களே கிடைத்தன. அதேசமயம் வசூலில் நூறு கோடி ரூபாயை அள்ளிவிட்டதாக தயாரிப்பு தரப்பான டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பராசக்தி படம் பற்றி பேசியிருக்கிறார்.
சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்குவதாக இருந்த புறநானூறு படம்; சிவகார்த்திகேயனுக்காக பராசக்தி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டதால் பெரிய ஹைப்பை இயல்பாகவே பெற்றுவிட்டது. போதாக்குறைக்கு ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்ததும் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக காரணமாக அமைந்தது.
படத்துக்கு சுமார் வரவேற்புதான்: 60களில் நடந்த அரசியல் சூழல், இயக்கங்களின் தீரமான போராட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் படங்களில் இடம்பெறும்; தரமான சம்பவத்தை செய்யப்போகிறது என்றெல்லாம் ஆவலுடன் படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றமே கிடைத்தது. உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்க வேண்டிய கதையை காதலை எல்லாம் சேர்த்து பிரியாணியில் சர்க்கரை பொங்கலை வைத்து கொடுத்தது மாதிரி இயக்குநர் கொடுத்துவிட்டாரே என்று ரசிகர்கள் கூறினார்கள்.

100 கோடி ரூபாய் வசூல்: அதேசமயம் சிவகார்த்திகேயன், ரவி மோகனின் நடிப்பு கொண்டாடப்பட்டது. விமர்சனத்தில் அப்படி இப்படி ரிசல்ட்டை பெற்ற பராசக்தி வசூலில் நூறு கோடி ரூபாயை கலெக்ட் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்பு போலியானது; அவ்வளவெல்லாம் கண்டிப்பாக வசூலித்திருக்காது என்று எஸ்கேவுக்கு எதிர் தரப்பினர் தொடர்ந்து சொல்லிவருவதும் குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சொன்ன கருத்து: இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பராசக்தி படம் பற்றி பேசுகையில், "எனது மகனுடன் நான் பராசக்தி படம் பார்த்தேன். அந்தப் படத்தை பார்த்த பிறகு வெளியே வந்து அவரிடம், 'ஏன் ப்பா உனக்கு தமிழ்நாட்டில் மொழி போராட்டம் ஒன்று நடந்ததே. அது தெரியுமா? என்று கேட்டேன். அதற்கு அவரோ, எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொன்னான். அதை கேட்டு அவமானமாக இருந்தது. எனது கடமையில் இருந்து தவறிவிட்டதாக கருதினேன். மொழி போராட்ட வரலாறு அவருக்கு கட்டாயம் தெரிய வேண்டும்.
என்ன காரணம்?: இந்தத் தருணத்தில் அதை ஏன் சொல்கிறேன் என்றால் ஆங்கிலம் தெரியாமல் தமிழ்நாட்டை தாண்ட முடியாது என்பது எங்களுக்கு தெரியும். தமிழன் மற்ற மொழிகளை எதிர்க்கவும் இல்லை. அவன் விரும்பி படிக்கிறான். எனது மொழியின் தொன்மை, மொழி செருக்கு காரணமாக மற்றவர்கள் என் மீது இன்னொரு மொழியை திணித்தால் அதை ஏற்கமாட்டேன். மொழிக்கு இழுக்கு வரும்போது நமது குரல் உயர வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











