‘பராசக்தி‘யால் வந்த வினை.. மாட்டிக்கிட்ட இந்திரா காந்தி.. அந்த ரோலுக்கு பொருத்தமானவர் இவர் தான்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வெளியானதில் இருந்து அந்த படத்தை வைத்து இணையத்தில் பலவிதமான ட்ரோல்கள் வருகின்றன. அந்த வகையில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை யார்? ஒருவேளை அது விஜய் டிவி புகழா? என பலவிதமான விமர்சனங்கள் இணையத்தில் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அந்த ரோலுக்கு பொருத்தமானவர் இவர் தான் என பலரும் கூறி வருகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் ஜனவரி பத்தாம் தேதி வெளியான திரைப்படம் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் 25வது படமான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பராசக்தி என்ற பெயருக்காகவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 27 கோடிக்கு மேல் வசூலை பெற்று இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பராசக்தி: ஒரு பக்கம் பராசக்தி படத்தை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்த சந்தியா மிருதுல் என்ற பாலிவுட் நடிகையை ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் வரும் காட்சியை ஸ்கீன்ஷார்ட் எடுத்து, இந்திரா காந்தியாக நடித்தது விஜய் டிவி புகழ் தான் என்று கிண்டலடித்து வருகின்றனர். இதனால், இந்திரா காந்தி கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
என்ன வன்மம்: அதன்படி, இந்திரா காந்தி பற்றி தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட கதாபாத்திரம் எதுவும் இல்லை. ஆனால், 1975 ஆம் ஆண்டு வெளியான Aandhi என்கிற இந்தி படத்தில் சுசித்ரா சென்னும், , Indu Sarkar என்ற இந்தி படத்தில் சுப்ரியா வினோத் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். ஆனால், மனதில் பதித்த பொருத்தமான கதாபாத்திரம் என்றால் அது, 2021 ஆம் ஆண்டு வெளியான Bell Bottom படத்தில் லாரா தத்தா இந்திரா காந்தி ரோலில் நடித்தது தான். அதே போல, இமர்ஜென்சி காலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான அரசியல் வரலாற்று படமான 'Emergency' படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரணாவத் நடித்து பெயர் எடுத்தார். இப்படி கை தேர்ந்த பல நடிகைகள் இருக்கும் போது பொருத்தமான ஒருவரை போடாமல், ட்ரோலுக்கு உள்ளாகும் அளவில் இருக்கும் ஒரு நடிகையை படத்தில் பயன்படுத்திய ஏன் என்றும், காங்கிரஸ் மீது அம்மணிக்கு அப்படி என்ன வன்மம் என இணையவாசிகள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











