SK முதல் GV வரை.. பராசக்தி டீமை மொத்தமாக தூக்கிய பாஜக.. பிரதமர் முன் திருவாசகம் இசைத்த GV
டெல்லி: நாளை பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இன்று போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கையில் மத்திய அமைச்சர் எல். முருகனின் டெல்லி வீட்டில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பராசக்தி படத்தின் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா, பராசக்தி படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திருவாசகம் இசைத்துள்ளார். இது தொடார்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பராசக்தி படக்குழு: இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன. இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் பராசக்தி படம் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை திரைக்கதையாக அமைத்து படத்தை இயக்கி உள்ளார்கள். 1965 கால கட்டங்களில் அன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இந்தியை திணிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டது. அதேபோல், தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியைத் திணிக்கும் வேலையைச் செய்கிறது என்று தமிழ்நாடு அரசு, குற்றம் சுமத்தி வருகிறது. இப்படி இருக்கையில் இந்தி திணிப்புக்கு எதிரான படத்தில் நடித்து விட்டும், இசையமைத்துவிட்டும், பாஜக நடத்திய பொங்கல் விழாவில் பிரதமர் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் இவர்களும் கலந்து கொண்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

ஜிவி பிரகாஷ்: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், " மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, திருவாசகத்தை அரங்கேற்றம் செய்தது ரொம்பவும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும், இது விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











