ஜனநாயகனோடு மோதும் பராசக்தி.. இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் இல்லை.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக மதராஸி திரைப்படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இப்படம் எவ்வளவோ பரவாயில்லை என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது ஜனவரி பத்தாம் தேதி ஜனநாயகனுக்கு போட்டியாக களமிறங்கவிருக்கிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கரியரையே மாற்றி வைத்திருக்கிறது. பலரும் அவரது கமர்ஷியல் மற்றும் மாஸ் மொமன்ட்ஸ்களுக்காக சீன்களை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி சம்பளத்திலும் பன்மடங்கை அவர் அதிகரித்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. மதராஸி திரைப்படமும் அண்மையில் வெளியாகி முதலுக்கு மோசமில்லை என்ற ரிசல்ட்டை பெற்றுக்கொடுத்தது.
அடுத்த படங்கள்: அவர் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் முதலில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறி எஸ்கே உள்ளே வந்தார். முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இது அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இயக்குநர் தொட்டிருக்கும் கதை கரு அப்படி.

என்ன கதை கரு?: அதாவது தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக வைத்துதான் சுதா இப்படத்தை எடுத்திருப்பதாக தெரிகிறது. படத்தின் க்ளிம்ப்ஸும் வெளியாகி எஸ்கே இதில் வேறு மாதிரி தோன்றவிருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. முதன்முறையாக இந்த ஜானர் படத்தில் சிவா நடிப்பதால் ரிசல்ட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமே எழுந்திருக்கிறது.
ஜனநாயகனுக்கு போட்டி: முதலில் இப்படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜனவரி பத்தாம் தேதியே ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனநாயகன் ஒன்பதாம் தேதி ரிலீஸ். ஜனநாயகன் Vs பராசக்தி போட்டிக்கு சிவகார்த்திகேயனே காரணம் என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு இதுகுறித்து பேசியிருக்கிறார்.
செய்யாறு பாலு பேசியது: அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி வருவதற்கு சிவகார்த்திகேயன் காரணம் என்று தொடர்ந்து சொல்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் 1100 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன. ஜனநாயகன் படத்தை போட்டுவிட்டால் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதை நாங்கள் எடுக்கமாட்டோம். தியேட்டர் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். எல்லோரின் கவனமும் ஜனநாயகன் மீது இருப்பதால்; 500 கோடி ரூபாய் பணத்தை பராசக்தியில் போட்டிருக்கும் தயாரிப்பாளர்தான் முன்னாடியே வரலாம் என்று முடிவு சேய்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











