பராசக்தியில் பேரறிஞர் அண்ணா சீனை தூக்கிய சென்சார்.. படக்குழு செய்த சூப்பர் மூவ்.. தீ பரவிடுச்சு பாஸ்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி படம் இன்று வெளியாகவிருக்கிறது. தமிழ்நாட்டில் காலை ஒன்பது மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. வெளிநாடுகளில் ஷோக்கள் ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையே சென்சார் குழுவினர் மொத்தம் 25 இடங்களில் திருத்தம் சொன்னார்கள். அதில் பேரறிஞர் அண்ணா தொடர்பான முக்கியமான சீனையும் தூக்கிவிட்டார்கள். இந்நிலையில் படக்குழுவின் மூவ் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சூரரைப் போற்று படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரை வைத்து பராசக்தி படத்தை இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இது தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் 60களில் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவருக்கு இது நூறாவது படமாகும். சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படமாகும்.
சென்சார் பிரச்னை: படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டபோது முதலில் அவர்கள் சான்றிதழ் கொடுக்கவில்லை. நேற்று பிற்பகல் வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் திட்டமிட்டபடி பத்தாம் தேதி வெளியாகுமா என்ற அச்சம் அனைவரிடமும் எழுந்திருந்தது. ஒருவழியாக மொத்தம் 25 இடங்களில் திருத்தம் சொல்லி நேற்று அதிகாரிகள் யு/ஏ சான்றிதழை பராசக்திக்கு கொடுத்தார்கள். எனவே ரிலீஸில் எந்த சிக்கலும் இல்லை.

குதறிய குழுவினர்: ஆனாலும் 25 இடங்களில் கட், மியூட் என்பது கொஞ்சம் ஓவர்தான். நேற்று அவர்கள் திருத்தம் சொன்ன லிஸ்ட் வெளியானது. அதில் படத்தின் அடிநாதமான தீ பரவட்டும் என்ற வார்த்தையையே நீதி பரவட்டும் என்று மாற்ற சொல்லியது தெரிய வந்தது. அதேபோல் பேரறிஞர் அண்ணா கூறிய, 'நான் கொண்டு வந்ததை யாராவது மாற்ற நினைத்தால் மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே எழும். அந்த பயம் இருக்கும்வரை இந்த நாட்டை யார் ஆண்டாலும் அண்ணாதுரைத்தான் ஆள்கிறான் என பொருள்' என்ற வரலாற்று சிறப்புமிக்க வசனமும் படத்தில் இடம்பெற்றிருந்தது.
படக்குழுவின் சூப்பர் மூவ்: அதையும் மொத்தமாக தூக்கிவிட சொல்லிவிட்டார்கள் அதிகாரிகள். இந்தியாவில் வெளியாகும் ப்ரிண்ட்டில்தான் இந்த சென்சார் கட்டுகள் இடம்பெறுகின்றன. வெளிநாடுகளை பொறுத்தவரை பராசக்தி அன் கட் வெர்ஷனே வருகிறது. பேரறிஞர் அண்ணாவின் வந்த வசனத்தை திரையில் கேட்க முடியாமல் போய்விட்டதே என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். இந்நிலையில் படக்குழு சூப்பரான ஒரு மூவை செய்து ரசிகர்களிடம் அப்ளாஸை அள்ளியிருக்கிறது.
என்ன செய்தது?: அதாவது தியேட்டரில்தானே அதை நாங்கள் வைக்கக்கூடாது; நாங்கள் டிவி சேனலில் போடப்படும் படத்தின் ப்ரோமோவில் அதை வைப்போம் என்பது மாதிரி; சேனல்களில் ஒளிபரப்பாகும் ப்ரோமோக்களில் அந்த விஷயத்தை வைத்துவிட்டது. அதை பார்த்த ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைந்துவிட்டார்கள். இப்படத்தில் பேரறிஞர் அண்ணாவாக சேத்தன் நடித்திருந்தார். ட்ரெய்லரில் அவரை அண்ணா கெட் அப்பில் பார்த்த ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











