பராசக்தி எப்படி இருக்கிறது?.. குடும்பத்தோடு போய் பாருங்கள்.. படத்தை கொண்டாடிய பிரபலம்.. சூப்பரா இருக்கோ

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இது எஸ்கேவுக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்சார் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து படமானது இன்று பிரமாண்டமாக வெளியானது. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாததால் இப்படத்துக்கு தியேட்டர்கள் அதிகம் கிடைத்தன. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி பராசக்தி படம் பற்றி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

அமரன் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டர், மதராஸி படத்தின் சூப்பர் ஹிட் ஆகியவற்றை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். சூரரைப் போற்று படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் சுதா. அவரும், சிவாவும் முதன்முறையாக சேர்ந்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களை ஏற்றிருக்கிறார்கள்.

சூப்பர் கதைக்களம்: ரியல் சம்பவங்களை எடுத்துக்கொண்டு அதை தன்னுடைய ஸ்டைலில் படமாக்குபவர் சுதா. சூரரைப் போற்று படமும் அப்படித்தான் உருவானது. இப்போது பராசக்தியும் அப்படித்தான் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 1960களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்துக்கு கதையும், திரைக்கதையும் எழுதியிருக்கிறார் இயக்குநர். இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தை பார்ப்பதற்கு உச்சக்கட்ட ஆவல் எழுந்திருந்தது.

Parasakthi Review Prashanth Rangasamy Calls Sivakarthikeyan s Film His Best
Photo Credit:

இன்று ரிலீஸ்: ஹிந்தி திணிப்புக்கு எதிராக படம் இருப்பதால் சென்சாரில் ஏகப்பட்ட கட்டுகளை வாங்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதிர்பார்த்த மாதிரியே மொத்தம் 25 இடங்களில் திருத்தம் பெற்றது படம். இதனால் ஏகப்பட்ட வசனங்களில் எல்லாம் மியூட்தான் விழுந்திருக்கின்றன. அவர்கள் சொன்ன அத்தனை மாற்றங்களையும் செய்து இன்று இந்தியாவில் வெளியானது. வெளிநாடுகளில் எந்த கட்டும், மியூட்டும் இல்லாமல்தான் வெளியாகியுள்ளது.

எப்படி இருக்கு படம்: ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை என்பதால் தமிழ்நாட்டில் பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றன. மொத்தம் 700 திரையரங்குகள்வரை படத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை படத்தை பார்த்த அனைவருமே பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துவருகிறார்கள். முக்கியமாக சிவா மற்றும் ரவி மோகன் ஒட்டுமொத்த படத்தையும் தங்கள் தோளில் தாங்கியிருக்கிறார்கள் என கொண்டாடுகிறார்கள்.

பிரசாந்த் ரங்கசாமியின் எக்ஸ் விமர்சனம்: மேலும் சென்சிட்டிவ்வான கதையை கமர்ஷியல் வேல்யூக்களோடு சுதா கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகிறார்கள். இதுவரை பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்திருப்பதால் படக்குழுவினர் ஹேப்பியாக இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "பராசக்தி - தீ பரவட்டும்! எனக்காக , என் மொழிக்காக இன்னுயிர் ஈய்ந்த அனைத்து தெய்வங்களுக்கும் என் ஆன்ம வணக்கம் ! நீங்க நடிச்ச மிகச்சிறந்த படம் சிவகார்த்திகேயன். போய் குடும்பமாக பாருங்கள். எங்கள் பொள்ளாச்சி மண்ணின் தியாகட்த்தை எடுத்துரைத்த சுதா கொங்கராவுக்கு கோடி நன்றிகள்" என புகழ்ந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X