Parasakthi: பராசக்தி ‘ரத்னமாலா’ பாட்டு எப்படி இருக்கு?.. சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா ரொமான்ஸ் வேறலெவல்!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி திரைப்படம் போராளியின் கதை என நினைத்த ரசிகர்களுக்கு படத்திற்குள் ஆளமான காதல் கதையை அழகாக வைத்து இருக்கிறார் சுதா கொங்கரா என்பது ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிள் வெளியானதும் புரிந்திருக்கும்.
அடுத்த ஆண்டு வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான "அடி அலையே" பாடல் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள நிலையில், அடுத்ததாக அவரது இசை மற்றும் குரலில் "ரத்னமாலா" என்கிற அருமையான காதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
பராசக்தி செகண்ட் சிங்கிள்: ஜன நாயகன் படம் முதலில் ரிலீஸ் ஆகும் நிலையிலும், ஒவ்வொரு அப்டேட்டிலும் பராசக்தி டீம் முந்திக் கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே அடுத்த ஆண்டு பொங்கல் போட்டி பலப்பரீட்சை நடைபெற உள்ளது. துப்பாக்கி கொடுத்தவர் படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி அடையுமா? அல்லது வாங்கியவர் படம் கல்லா கட்டுமா? அல்லது 2 படங்களும் வெற்றிப் பெறுமா? என்கிற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவியுள்ளது. இந்நிலையில், பராசக்தி 2வது பாடலான 'ரத்னமாலா' பாடல் வெளியாகி இளைஞர்களை கவர்ந்துள்ளது.

கிளாஸிக் ரொமான்ஸ்: சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா படத்திலும் கிளாசிக் ரொமான்ஸ் காட்சிகள் அழகாகவும் அருமையாகவும் இடம்பெற்றிருந்தது. ஆனால், ரசிகர்கள் அந்த படத்தை பெரிதாக கண்டுக்கொள்ளாத நிலையில், மிகப்பெரிய டிசாஸ்டர் படமாக மாறிவிட்டது. ஆனால், பராசக்தி படத்தில் வெயிட்டான கதை உள்ள நிலையில், அதன் கூடவே இருக்கும் கிளாசிக் ரொமான்ஸ் காட்சிகளும் ஜி.வி. பிரகாஷ் இசையுடன் சேர்ந்து படத்துக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் செம க்யூட்: ஸ்ரீலீலாவை விட சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் 2 பாடல்களிலும் செம க்யூட்டாக தெரிகிறார் என்றே அவரது ரசிகர்கள் வர்ணித்து லைக்குகளை குவித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷின் காதல் பாடல்களை தாண்டி சுதா கொங்கரா படத்தில் என்ன மேஜிக் செய்துள்ளார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











