பராசக்தி நாக் அவுட்டா? யார் சொன்னது? அணைத்தாலும் தீ பரவும்.. பராசக்தி படத்தின் அதிகாரப்பூர்வ வசூல்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பராசக்தி' படம் 10ந் தேதி வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா, சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கி உள்ளார் சுதா கொங்கரா. படம் வெளியாகி இன்றோடு 10 நாளாகி உள்ள நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அமரன் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சிவகார்த்திகேயன், பராசக்தி படத்தில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் போராளியாக நடித்துள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். 1960 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் எப்படி இருந்தது அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் எழுச்சி எந்த அளவிற்கு இருந்தது, ஹிந்தி மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எதிர்த்து மாணவர்கள் எப்படி உயிர் தியாகம் செய்தார்கள் என்பதை 'பராசக்தி' என்ற பெயரில் இயக்குனர் சுதா கொங்கரா எடுத்து இருக்கிறார்.

தீ பரவட்டும்: இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, சேத்தன் ஆகியோர் நடித்திருந்தனர். ஹீரோவாக கலக்கி வரும் ரவி மோகன் இந்த படத்தில் வில்லன் ரோலில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். பராசக்தி படத்தின் இயக்குநர் தெலுங்கு, ஸ்ரீ லீலா என மற்ற நடிகர்கள் அனைவரும் தெலுங்கு நடிகர்களாக இருக்கும் போது, படம் எப்படி தமிழின் பெருமையை பேசு என பல விதமான விமர்சனம் இருந்தன. மேலும், இணையத்தில் பலர் பராசக்தி படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் காத்து வாங்குகிறது, படத்தை சீண்ட ஆள் இல்லை, 3 நாட்களிலேயே நாக் அவுட் என கடுமையான விமர்சனங்களை படம் எதிர்கொண்டது.
ரூ100 கோடி வசூல்: ஆனால், தயாரிப்பு நிறுவனம் முதல் நாளில் உலகளவில் பராசக்தி திரைப்படம் சுமார் 27 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் பராசக்தி படத்தின் வசூல் சற்று சரிந்து, பொங்கல் விடுமுறையில் மீண்டும், படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் பராசக்தி படம் ரூ100 கோடியை வசூலித்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











