பராசக்தி ஹிட்டா? தோல்வியா?.. ரிலீஸாகி மூன்றாவது நாளே சுதா கொங்கரா இப்படி பேசிருக்காங்களே
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படம் கடந்த பத்தாம் தேதி ரிலீஸானது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி படத்தை எடுத்திருந்தார் இயக்குநர். படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை கொடுத்தார்கள். இந்நிலையில் பராசக்தி படக்குழுவினர் இன்று நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தினார்கள்.
அமரன் மெகா ஹிட், மதராஸி சூப்பர் ஹிட் என்ற நிலைமையுடன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். இது அவருக்கு 25ஆவது படமாகும். ரவி மோகன் வில்லனாக நடிக்க; அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் அவருக்கு நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி உச்சக்கட்ட ஹைப்புகளோடு கடந்த பத்தாம் தேதி படம் ரிலீஸானது.
மக்கள் கொடுத்த சூப்பர் ஆதரவு: தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். இதன் காரணமாக தமிழ்நாட்டு மக்களுக்கு படம் உணர்வுரீதியாக கனெக்ட் ஆகிவிட்டது. பற்றாக்குறைக்கு கமர்ஷியல் வேல்யூஸையும் இயக்குநர் குறைக்காமல் புத்திசாலித்தனமாக கையாண்டிருக்கிறார் என படம் பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்.

வசூலில் சூப்பர்: விமர்சன ரீதியாக கிட்டத்தட்ட 97 சதவீதம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் கிடைத்துள்ளது. சிலர் மட்டும்தான் இப்படம் மோசம் என்கிற ரீதியில் பேசிவருகிறார்கள். எப்படிப்பார்த்தாலும் இப்படம் ஹிட்டாகிவிட்டது உறுதியாகிவிட்டது. வசூலிலும் சக்கைப்போடு போடும் விதமாக ரிலீஸான இரண்டு நாட்களின் முடிவில் 51 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டுவிட்டார்கள்.
நன்றி தெரிவிக்கும் நிகழ்வு: இதன் காரணமாக படக்குழுவினர் உச்சக்கட்ட ஹேப்பியில் இருக்கிறார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், இயக்குநர் சுதா கொங்கராவையும், நடிகர் சிவகார்த்திகேயனையும் நேரில் பார்த்து வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். சூழல் இப்படி இருக்க சென்னையில் இன்று பராசக்தி படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தினார்கள். அதில் சுதா கொங்கரா பேசியிருப்பது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுதா கொங்கரா பேச்சு: அவர் பேசுகையில், "இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த ஐந்து நாட்களில் எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஸிங்க் ஆகவில்லை. ஒருநாள் இரவு அவரிடம் பேசினேன். இரவு 8.30 மணியிலிருந்து 12.30 மணிவரை பேசினோம். அடுத்த நாளிலிருந்து எல்லாம் சரியாகிவிட்டது. என்னால் நிறைய டார்ச்சர்களை அவர் அனுபவித்திருக்கலாம். காலையில் நேரத்துக்கு வர வேண்டும். வரவில்லை என்றால் என்ன நடக்கும் என அவர்களுக்கே தெரியும். இந்தப் படம் ஹிட்டா, தோல்வியா என்ற குழப்பத்தில்தான் பத்திரிகையாளர் காட்சிக்கு சென்றேன். அங்கு அவர்கள் கொடுத்த ஊக்கம் நன்றாக இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











