பராசக்தி ஆடியோ லான்ச் விஷயம்.. ரவி மோகனை எச்சரித்த ஆர்த்தி ரவி? .. என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

சென்னை: ரவி மோகன் இப்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பராசக்தி படத்தில் நடித்திருக்கிறார். நாளை அந்தப் படம் வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படம் பெறுவதற்கு ரவி வில்லனாக நடித்திருப்பதும் ஒரு காரணமாகும். கண்டிப்பாக அவரது வில்லத்தனமான நடிப்பு படத்துக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு பத்து வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட; ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார் ரவி. இப்போது அவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. சேர்ந்து வாழ ஆர்த்தி முயற்சித்தும் அதற்கு பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆர்த்தியை பிரிந்த ரவி முழுக்க முழுக்க தனது கரியரில் கவனம் செலுத்திவருகிறார்.

பராசக்தி படத்தில் வில்லன்: இத்தனை நாட்கள் ஹீரோவாக மட்டுமே நடித்துவந்த அவர்; முதன்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் பராசக்தியில் திருநாடன் என்ற ரோலை ஏற்றிருக்கும் ரவி; வில்லத்தனமான நடிப்பை மிரட்டலாக கொடுத்திருக்கிறார் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ட்ரெய்லரிலும் ரவி அவ்வளவு ஸ்டைலிஷ் வில்லனாக தோன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Parasakthi Villain Ravi Mohan s Speech Sparks Divorce Buzz Aarti Ravi Cryptic Instagram Reply
Photo Credit:

நாளை ரிலீஸ்: படமானது நாளை வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை படம் பெற்றிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரவி பேசிய சில விஷயங்கள், ஆர்த்தியுடனான டைவர்ஸ் பிரச்னையை உணர்த்துவதாக இருந்தது என அப்போதே பேச்சுக்கள் எழுந்தன. அதாவது அவர் சுதா கொங்கரா பற்றி பேசுகையில், 'நல்ல ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் எப்படி பாதுகாப்பாக உணர்வாரோ; அதேபோல் நான் நல்ல பெண் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த ஈகோவும் இல்லை, பிரச்னையும் இல்லை' என தெரிவித்தார். அதை பார்த்த பலரும், இந்தப் பேச்சில் ஆர்த்தியையும், அவரது தாயையும் தாக்கியிருக்கிறாரோ என கேள்வி எழுப்பினர்.

உறுதி செய்த ரசிகர்கள்: அதுமட்டுமின்றி, 'இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு காரணம் சுயமரியாதையை காப்பாற்றும் படம் இது. அதனால்தான் நடித்தேன். நானும் எனது வாழ்க்கையில் சுயமரியாதை காப்பாற்றுவதற்காக போராடினேன்' என குறிப்பிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்களோ, இது நிச்சயம் தனது டைவர்ஸ் விஷயத்தை பற்றித்தான் கூறுகிறார். ஏனெனில் ஆர்த்தி தரப்பு தனக்கு மரியாதை தரவில்லை என்பதை பெரிய காரணமாக சொல்லித்தான் அவருடனான பிரிவை அறிவித்தார் என கூறினார்கள்.

ஆர்த்தியின் பதிலடி: மேற்கூறியபடி ரவி இரண்டு விஷயங்களையும் பேசியதை அடுத்து சோஷியல் மீடியாக்களில் அதுதொடர்பான வீடியோக்கள் பயங்கரமாக ட்ரெண்டாகின. இந்நிலையில் ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அவர், 'வார்த்தையை அளந்து பேச வேண்டும். கர்மா கேட்டுக்கொண்டிருக்கிறது' என குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஸ்டோரி ரவிக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகத்தான் ஆர்த்தி வைத்திருக்கிறார் என கமெண்ட்ஸுகளும் பறக்க ஆரம்பித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X