அன்னைக்கு மட்டும் உள்ளே அதைத்தான் போடுவேன்.. ரவி மோகனின் பப்பி ஷேம் டாக்.. ஓபனா சொல்லிட்டாரே

சென்னை: ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்திருக்கும் படம் பராசக்தி. இன்று முதல் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இதுவரை படம் பார்த்தவர்கள் தங்கள்து பாசிட்டிவ் விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்கள். முக்கியமாக ரவி மோகனின் வில்லத்தனமான நடிப்பு அனைவரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அவர் அதிரடியாக பேசிய விஷயம் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சக்சஸ்ஃபுல் ஹீரோவாக ஜொலிப்பவர் ரவி மோகன். அவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. படம் சுமார் வெற்றியைத்தான் பெற்றது. அவரது படங்கள் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் அவர் கதை தேர்வு செய்யும் விதம் எப்போதுமே தனித்துவமாக இருக்கும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாகக்கூட ஜீனி, கராத்தே பாபு உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.

வில்லனாக ரவி மோகன்: இத்தனை நாட்கள் ஹீரோவாக மட்டும் கலக்கிவந்த ரவி; வில்லனாகவும் நடிக்க முடிவு செய்தார். அந்தவகையில் அவர் முதன்முறையாக வில்லனாக சிவகார்த்திகேயனுக்கு நடித்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே நடித்திருக்கும் பராசக்தி படத்தில் திருநாடன் என்ற கேரக்டரை ஏற்றிருக்கிறார். பக்கா ஸ்டைலிஷாகவும், மிரட்டலாகவும் அவர் இருக்கும் லுக்குகள் பட்டாசாக இருந்தன. ட்ரெய்லரிலும் அவர் வரும் இடங்கள் எல்லாம் சூப்பராக இருந்தன.

Parasakthi Villain Ravi Mohan Steals the Show His Funny Habit Confession Goes Viral
Photo Credit:

இன்று ரிலீஸ்: பராசக்தி படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் இன்று ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. வெளிநாடுகளில் அன் கட் வெர்ஷன் வெளியானது. இந்தியாவில் மொத்தம் 25 இடங்களில் சென்சார் அதிகாரிகள் சொன்ன திருத்தங்களுடன் ரிலீஸாகியுள்ளது. இதுவரை படம் பார்த்த அனைவருமே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்துவருகிறார்கள்.

ரவி அசத்தல்: முக்கியமாக ரவி மோகனின் வில்லத்தனமான நடிப்புக்கு அப்ளாஸ்கள் கொட்டி கிடைக்கின்றன. தமிழ் சினிமாவுக்கு அட்டகாசமான ஒரு வில்லன் கிடைத்துவிட்டார் என்றும்; ஹீரோவாக எப்படி கலக்கினாரோ அதேபோல் வில்லனாகவும் மிரட்டுகிறார் என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தியேட்டர்களில் அவர் வரும்போதெல்லாம் கைத்தட்டல்கள் அவ்வளவு விழுகின்றன. இந்நிலையில் ரவி மோகன் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

ரவியின் பேட்டி: அவர் அளித்த ஒரு பேட்டியில் அவரிடம் தொகுப்பாளினி, உங்களுக்கு இருக்கும் ஒரு வினோத பழக்கம் என்ன என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ரவி, 'எனது நண்பன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை ஆனால் சிகப்பு கலரில் ட்ரெஸ் போடு என சொல்லி பழக்கப்படுத்திவிட்டான். எனவே ஞாயிறில் சிகப்பு உடைதான்' என கூறினார். அதற்கு தொகுப்பாளினியோ, 'அன்றய நாள் ஷூட்டிங் இருந்தால் என்ன செய்வீர்கள்' என கேட்க; 'உள்ளாடையை அந்த் நிறத்தில் போட்டுக்கொள்வேன்' என சைகையில் சிரித்தபடி சொன்னார். அதை கேட்டு தொகுப்பாளனி உள்ளிட்டோர் சத்தமாக சிரித்துவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X