Parasakthi Vs Jana Nayagan: தலைக்கு மேல 1008 பிரச்னை.. இதுல டிரைலர் சண்டைக்கு தான் குறைச்சலா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பராசக்தி. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை வரும் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. அதேபோல் நடிகர் விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம், ஜன நாயகன். கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இரண்டு படங்களுக்குமே, தீர்க்க வேண்டிய பெரிய பஞ்சாயத்து உள்ளது. ஆனால் ரசிகர்கள் இணையத்தில் சிறுபிள்ளைத் தனமாக சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
ஜன நாயகன் மற்றும் பராசக்தி என இரண்டு படங்களும் இந்த வாரத்தின் இறுதியில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளது. இப்படி இருக்கும்போது, படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, இரண்டு படத்திற்கும் இன்னும் உள்நாட்டில் புக்கிங் தொடங்கப்படவில்லை. வெளிநாட்டில் இரண்டு படங்களுக்குமான புக்கிங் என்பது சிறப்பாக சென்று கொண்டுள்ளது.
இதற்கு காரணம் இரண்டு படங்களும் இன்னும் உள்நாட்டில் சென்சார் சான்றிதழ் வாங்காமல் உள்ளனர். பராசக்தி படத்தை பொறுத்தவரை யு/ஏ சான்றிதழ் வழங்குவதாக சென்சார் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் இயக்குநரும் தயாரிப்பாளரும் இணைந்து படத்திற்கு யு சான்றிதழ் வேண்டும் என்று முறையிட்டு பார்த்தனர். ஆனால் சென்சார் தரப்பில் தர மறுத்ததால், ரிவைசிங் கமிட்டிக்கு சென்றுள்ளனர். அங்கு படம் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்துதான் படத்திற்கு சான்றிதழ் கிடைக்கும். அதன் பின்னர்தான் படத்தின் புக்கிங்கை இந்தியாவில் தொடங்க முடியும்.

ஜன நாயகனுக்கு என்ன சிக்கல்: பராசக்தி படத்திற்கு இதுதான் பிரச்னை என்றால், ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவதில் என்ன சிக்கல் என்று இதுவரை படக்குழு தரப்பில் வெளிப்படையான தகவல் இல்லை. மேலும் சென்சார் பெறுவதில் பாஜக அழுத்தம் கொடுத்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது என்ற பேச்சு மட்டும் ஓடிக் கொண்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் தியேட்டார்கள் ஒதுக்குவதில் திமுக நெருக்கடி கொடுக்கிறது என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் என்ன பிரச்னை: ஆனால் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி அளித்த பேட்டியில், நாங்கள் ஜன நாயகனுக்கு 70 சதவீத ஷேர் கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் 75 சதவீத ஷேர் கேட்கிறார்கள். அப்படி கொடுத்தால் எங்களால் தியேட்டர் நடத்துவது என்பதே சவாலானதாக மாறிவிடும். எனவே அவரது கடைசி படம் என்பதால் நாங்கள் 70 சதவீத ஷேர் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து, தமிழ்நாட்டில் தியேட்டர்கள் ஒதுக்குவதில் உள்ள பிரச்னையை வெளிப்படுத்தி விட்டார்.

டிரைலர் சண்டை முக்கியமா?: தலைக்கு மேல் இவ்வளவு பிரச்னைகள் தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கும் போது, விஜய் ரசிகர்கள் இணையத்தில் பராசக்தி படத்தின் டிரைலரை பார்த்தவர்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் சன் டிவி நிர்வாகம் பாட் வைத்து அதிக எண்ணிக்கையை காட்டுகிறார்கள் என்று விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











