பராசக்தி படம் இத்தனை கோடி பாக்ஸ் ஆபீஸ் லாபம் அள்ளுமா?.. அடடே அந்த பிரபலமே சொல்லிட்டாரே!

சென்னை: ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் திரைப்படம் வெளியாகாது என்பது உறுதியாகி விட்டது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை நாளை மறுநாள் ஒத்திவைத்த நிலையில், ஜனவரி 10ம் தேதி பராசக்தி படத்துடன் ஜன நாயகன் வெளியாகுமா? அல்லது ஜனவரி 12ம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தியேட்டர் ஓனர்கள் இதற்கிடையா இந்த வாரம் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை நம்பித்தான் கல்லா கட்ட வேண்டும் என அந்த படத்துக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர். ஜன நாயகன் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை என்றால் பராசக்தி படத்துக்கான தியேட்டர்கள் அதிகரிக்கும்.

Parasakthi will be a huge hit at the box office and get a big profit revealed by Bismi

இந்நிலையில், பராசக்தி படத்தின் பட்ஜெட் மற்றும் படம் எந்தளவுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுக்கும் என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி சொன்ன பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தீயாக பரவி வருகிறது.

பராசக்திக்கு போட்டியே இல்லை: ஜன நாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தி வந்துவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பராசக்தி படத்துக்கு போட்டியே இல்லாத சூழல் உருவாகி விடும் என்றே தெரிகிறது. ஏற்கனவே யூடியூபில் பராசக்தி திரைப்படம் 50 மில்லியன் வியூஸ் சுமார் 5 கோடி ரசிகர்கள் டிரைலரை பார்த்து கொண்டாடியுள்ள நிலையில், பராசக்தி படத்தை மக்கள் இந்த வாரம் தியேட்டருக்குச் சென்று பார்த்தாலே மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்கின்றனர்.

Parasakthi will be a huge hit at the box office and get a big profit revealed by Bismi

பராசக்தி பட்ஜெட்: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் மேக்கிங் செலவு 70 கோடி ரூபாய் என்றும் ஆனால், படத்தின் புரொமோஷன் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சேர்த்து 142 கோடி ரூபாய் செலவு செய்து டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் பராசக்தி படத்தை உருவாக்கியுள்ளார் என பிஸ்மி கூறியுள்ளார்.

147 கோடி வசூல்: இந்நிலையில், பராசக்தி படம் உலகளவில் 147 கோடி வசூலை ஈட்டும் என்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு 5 கோடிக்கும் அதிகமாக லாபம் கிடைக்கும் என பிஸ்மி கணித்து கூறியுள்ளார். ஜன நாயகன் 9ம் தேதி வெளியாகாத நிலையில், ஜனவரி 9ம் தேதி பராசக்தி படத்தின் ப்ரீமியர் வெளியிட்டால் மேலும், கல்லா கட்டலாம் என்கின்றனர். ஆனால், முதலில் பராசக்தி படத்துக்கு தணிக்கை சான்று கிடைத்துவிட்டதா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X