பராசக்தி.. கண்டிப்பா இது சூர்யாவுக்கு காஸ்ட்லி மிஸ் தான்.. சிவகார்த்திகேயன் எங்கேயோ போயிட்டாரே!
சென்னை: சுதா கொங்கராவின் படங்கள் எல்லாமே ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே இதுவரை கொண்டு சென்றிருக்கிறது. இந்தியில் அவர் அக்ஷய் குமாரை வைத்து சூர்யா தயாரிப்பில் எடுத்த சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் தான் பெரிதாக பாலிவுட் ரசிகர்களை கவரவில்லை. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான துரோகி படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் சுதா கொங்கரா 2016ம் ஆண்டு இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் தான் இந்தியளவில் அவரை திரும்பிப் பார்க்க வைத்தது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் அந்த படம் வெளியானது.

அதன் பின்னர் அவர் சூர்யாவை வைத்து இயக்கிய சூரரைப் போற்று படத்திற்காக பல தேசிய விருதுகள் குவிந்தன. ஆனால், அக்ஷய் குமார் நடித்து அதே படம் சர்ஃபிரா என இந்தியில் வெளியாக யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை. இந்நிலையில், மீண்டும் தமிழில் 'பராசக்தி' படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா.
சிவகார்த்திகேயனுக்கு ராஜயோகம்: அமரன் படத்தின் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் மார்க்கெட் தமிழ் சினிமாவில் விஜய்க்கு அடுத்த இடத்திற்கு சென்றுவிட்டது. 350 கோடி வசூலை அந்த படம் ஈட்டிய நிலையில், அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படமும் அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'பராசக்தி' படமும் பாக்ஸ் ஆபிஸில் அவரை எங்கேயோ கொண்டு செல்லப் போவதாக கோலிவுட்டே எதிர்பார்த்து காத்திருக்கிறது. நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகவுள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை சிவகார்த்திகேயன் கொடுப்பார் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.
சூர்யாவுக்கு காஸ்ட்லி மிஸ்: பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தை வேண்டாமென சொல்லி விலகிய நடிகர் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால், ஒரு சில காரணங்களுக்காக சூர்யா இந்த படத்தில் இருந்தும் விலகி விட்டார். வணங்கான் படம் வசூல் ரீதியாக பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், அருண் விஜய்யின் நடிப்பு பாராட்டப்பட்டது. ஆனால், கண்டிப்பாக பராசக்தி படம் சூர்யாவுக்கு காஸ்ட்லி மிஸ் ஆகத்தான் இருக்கும் என ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் கூறி வருகின்றனர். தேசிய விருது வாங்கித் தந்த சுதா கொங்கரா படத்தில் இருந்து அவர் விலகியிருக்கக் கூடாது என்று கூறுகின்றனர்.
வாடிவாசல் சம்பவம் பண்ணும்: இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ரெட்ரோ, அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் எல்லாம் சூர்யாவுக்கு வெற்றிப் படங்களாக அமையும். அனைத்தையும் விட வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா இணைந்து நடிக்கவுள்ள வாடிவாசல் திரைப்படம் அவருக்கு நிச்சயம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக மாறும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். விடுதலை 2 திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும் சூர்யாவின் வாடிவாசல் படம் மூலம் வெற்றிமாறனும் கம்பேக் கொடுப்பார் என்கின்றனர்.
டிரெண்டிங்கில் ஸ்ரீலீலா: விஜய் படத்தில் ஒரு பாடலுக்கே ஸ்ரீலீலா நடனம் ஆடமாட்டேன் என மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், ஸ்ரீலீலாவுக்கு தமிழில் சூப்பரான அறிமுகமாக பராசக்தி படம் இருக்கும் எனக் கூறுகின்றனர். ஸ்ரீலீலாவை தமிழ் சினிமா ரசிகர்களும் சிவகார்த்தியேன் ஆர்மியும் அன்போடு வரவேற்று வருகின்றனர். இந்த படத்தில் அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா? அல்லது அதர்வாவுக்கு ஜோடியா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











