சிவகார்த்திகேயனுக்கு எதிராக டிரெண்டாகும் #ParasakthiDisaster.. முதல் ஷோவே காத்து வாங்குதாம்!
சென்னை: பராசக்தி படத்துக்கு ஒரு பக்கம் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் ஹேட்டர்கள் நெகட்டிவ் விமர்சனங்களையும் #ParasakthiDisaster ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
வெல்கம் டு பிக் லீக் சிவகார்த்திகேயன் என #ParasakthiDisaster ஹாஷ்டேக் கீழே அவரது ரசிகர்களும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். சுதா கொங்கரா திமுகவுக்கு அரசியல் ஆதாயத்தை தேடித்தரும் படமாக பராசக்தி படத்தை கொடுத்திருக்கிறார் என்றும் கருணாநிதியை படத்தில் காட்டிய விதம், பராசக்தி படத்தின் வசனங்கள் தெறியாக இருக்கும் என சொன்ன காட்சிகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

பராசக்தி படம் பீரியட் படம் போலவே இல்லை என்றும் சிவகார்த்திகேயன் மற்ற படங்களில் பேசுவது போல ரொம்பவே நார்மலாக பேசியும் நடித்தும் உள்ளார் என்று பங்கம் செய்து வருகின்றனர்.
கெனிஷா சொன்னது தான் உண்மை: படத்தின் ஹீரோ சிவகர்த்திகேயனை பார்க்கவே முடியவில்லை. அவரும் அந்த ஸ்ரீலீலாவும் பண்ணும் கிரிஞ்சு லவ் ஸ்டோரி படத்தை முதல் பாதியில் மொத்தமாக முடித்து விட்டது. கெனிஷா சொன்னது போல வில்லன் ரவி மோகனையே ஹீரோவாக போட்டு எடுத்திருந்தால் கூட படம் சூப்பராக இருந்திருக்கும். ஆனால், சுதா கொங்கரா தன்னுடைய ரொம்பவே வீக்கான படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கவில்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தியேட்டரில் எல்லாரும் தூங்குறாங்க: தீ பரவும்னு பார்த்தால், முதல் பாதியில் ஸ்ரீலீலாவை காட்டியதும் தியேட்டரில் எல்லாரும் தூங்குறாங்க. சுதா கொங்கரா தன்னை தெலுங்கராக இருந்தாலும், தான் ஒரு தமிழ் உணர்வாளர் என்பதை நிரூபிக்கவே ஸ்ரீலீலா கதாபாத்திரத்தை வைத்தது போல படத்தை எடுத்துள்ளார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், ஜன நாயகன் ரிலீஸ் ஆகாத நிலையிலும் பல தியேட்டர்களில் பராசக்தி படத்தின் முதல் காட்சிக்கு கூட்டமே இல்லாமல் டல் அடித்ததாக ரசிகர்கள் காலி தியேட்டர் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.
ஜன நாயகனை கொண்டு வாங்க: திமுக கொடியை கொண்டுட்டு வந்துட்டீங்க என்று ஒரு ரசிகர் திமுகவுக்கு ஆதரவான படம் பராசக்தி என்று தனது கருத்தை பதிவிட்டு செல்ல, சிவகார்த்திகேயன் ரசிகன் தான் நான், ஆனால், படம் சுத்தமா நல்லா இல்லை. லவ் போர்ஷன் எல்லாம் ரொம்ப மொக்கை. சீக்கிரம் ஜன நாயகனை ரிலீஸ் பண்ணுங்க, இந்த பொங்கலை கொண்டாடவே முடியல என பேசிச் சென்ற பப்ளிக் விமர்சன வீடியோவையும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
காதலர் தினம் குணால்: "யார்ரா அது பகலில் வீட்டுக்குள்ள cooling glass போட்டுக்கிட்டு
நான் தான் sir
காதலர் தினம் குணால் வந்துருக்கேன்!" என கடைசி சீனில் அண்ணா துரை பக்கத்தில் கருணாநிதியை காட்டிய காட்சியை வைத்து நெட்டிசன்கள் ரோஸ்ட் செய்து வருகின்றனர். சட்டசபை காட்சிகள், முதலமைச்சர் பக்தவச்சலமாக நடித்த நடிகர், இந்திரா காந்தியாக வந்த நடிகை என பல இடங்களில் சுதா சொதப்பி விட்டார் என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











