மாற்றுத்திறனாளி மகனுக்காக முக்கிய கோரிக்கை வைக்கும் பரவை முனியம்மா.. நிறைவேற்றுமா தமிழக அரசு?

தனது மாற்றுத்திறனாளி மகனுக்காக தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார் நடிகை பரவை முனியம்மா.

மதுரை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு வழங்கியுள்ள 6 லட்சம் ரூபாயை தனது காலத்துக்குப் பிறகு தனது மாற்றுத்திறனாளி மகனின் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என தமிழக அரசுக்கு நடிகை பரவை முனியம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

தூள் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. இவர் பாடிய சிங்கம் போலே என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ளது. இதையடுத்து அவர் பல திரைப்படங்களில் பாட்டியாக நடித்துப் புகழ்பெற்றார்.

Paravai Muniyamma asks help from government

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உடல்நலம் குன்றியிருந்த பரவை முனியம்மாவிற்கு, எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் உதவி செய்யப்பட்டது. அப்போது பரவை முனியம்மாவின் பெயரில் ரூ. 6 லட்சம் வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக டெபாசிட் செய்யப்பட்டது.

தற்போது அதன் வட்டிப் பணம் மாதம் ஆறாயிரம் ரூபாய் பரவை முனியம்மாவிற்கு கிடைத்து வருகிறது. அதன்மூலம் தனது செலவுகளைக் கவனித்து வரும், பரவை முனியம்மா, வயோதிகம் காரணமாக படவாய்ப்புகளுக்கு மறுப்பு தெரிவித்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில்தான் அவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள பரவை முனியம்மா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு வழங்கியுள்ள 6 லட்சம் ரூபாயை தனது காலத்துக்குப் பிறகு தனது 4 ஆவது மாற்றுத்திறனாளி மகனின் பெயருக்கு மாற்றித தர வேண்டும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரவை முனியம்மாவிற்கு மொத்தம் ஆறு பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X