அபி சரவணனுடன் 'மாயநதி' படம் பார்த்த பரவை முனியம்மா.. வெற்றி பெற வாழ்த்து!

Recommended Video

Maayanadhi Venba’s Life time dream | Abi Saravanan | Venba | Adukalam Naren

சென்னை: மாயநதி படத்தை அபி சரவணனின் குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்ந்தார் பரவை முனியம்மா, படம் வெற்றிப்படமாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்த் திரைத்துறையில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார் பரவை முனியம்மா. காதல், சடுகுடு, பூ, தேவைதையைக் கண்டேன் என இருபத்தைத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

 Paravai Muniyamma enjoyed the movie Maayanadhi

இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அப்போது, நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களை சந்தித்து அவர்கள் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் அபி சரவணன் - வெண்பா நடிப்பில் வெளியான மாயநதி திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

 Paravai Muniyamma enjoyed the movie Maayanadhi

இதனை கேள்விப்பட்ட பரவை முனியம்மா, மாயநதி படத்தை அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் பார்த்து மகிழ்ந்தார்.

நீண்ட நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மனதிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மாயநதி திரைப்படத்தினை பார்த்து அபி சரவணனை வெகுவாக பாராட்டினார். மேலும் இப்படம் வெற்றிப்படமாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X