மீண்டும் உடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க.. கலங்க வைக்கும் பரவை முனியம்மா!

Recommended Video

Paravai Muniyamma falls sick

மதுரை: மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பரவை முனியம்மா, தான் இறந்த பிறகு இந்த உதவியை மட்டும் செய்யுங்கள் என கூறி ரசிகர்களை கலங்க வைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்தவர் முனியம்மா. சிறு வயதில் இருந்தே அந்தப் பகுதியில் நாட்டுப்புற பாடலை ஆடிப்பாடி நடித்து வந்தார் பரவை முனியம்மா.

அவரது திறமைக்கு மிகவும் தாமதமாக வாய்ப்பு கிடைத்தது. சியான் விக்ரமுடன் தூள் படத்தில் நடித்தார் பரவை முனியம்மா.

சிங்கம் போல

சிங்கம் போல

இந்தப்படத்தில் அவர் பாடிய சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி பாடல் பெரும் பிரபலமானது. பரவை முனியம்மாவின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.

வறுமை நலக்குறைவு

வறுமை நலக்குறைவு

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார் பரவை முனியம்மா. வயோதிகம் காரணமாக திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்ததால் வறுமையால் வாடினார் பரவை முனியம்மா.

6 லட்சம் ரூபாய்

6 லட்சம் ரூபாய்

இதனையறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வைப்புத் தொகையாக பரவை முனியம்மாவுக்கு 6 லட்சம் ரூபாய் வழங்கினார். இந்தப்பணம் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாயாக அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கண்ணீருடன் பேச்சு

கண்ணீருடன் பேச்சு

இந்நிலையில் தற்போது மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் பரவை முனியம்மா. இதனை தொடர்ந்து கண்ணீருடன் ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

இறந்த பிறகு

இறந்த பிறகு

அதாவது தான் இறந்த பிறகும் தனக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றுத்திறனாளியான தனது மகனுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பரவை முனியம்மாவின் இந்த வேண்டுகோள் அப்பகுதி மக்களை கலங்க செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X