இருக்கறதுலயே இதுதான் ரொம்ப கடினம்... ஐஸ்வர்யா ரஜினி எதப்பத்தி சொல்லியிருக்காங்கன்னு பாக்கலாமா?
சென்னை : இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய விவாகரத்து முடிவிற்கு பிறகு அடுத்தடுத்த பிராஜக்ட்களில் பிசியாக காணப்படுகிறார். சமீபத்தில் இவரது முசாபிர் வீடியோ ஆல்பம் வெளியான நிலையில் அடுத்ததாக தன்னுடைய பாலிவுட் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இருவரும் கூட்டாக இந்த முடிவை வெளியிட்டனர். மேலும் தாங்கள் தொடர்ந்து நண்பர்களாக தங்களது உறவை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இயக்கத்தில் பிசியான ஐஸ்வர்யா
இதனிடையே இருவரும் தங்களது சினிமா கேரியரை தொடர்ந்து வருகின்றனர். தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதேபோல விவாகரத்து முடிவிற்கு பிறகு ஐஸ்வர்யா முசாபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி சமீபத்தில் வெளியிட்டார். இந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியானது. தமிழில் பயணி என்று பெயரிடப்பட்டிருந்த இந்த ஆல்பத்தை சூப்பர்ஸ்டாரும் அவரது தந்தையுமான ரஜினிகாந்த் வெளியிட்டார்.

பாலிவுட்டில் படமியக்கும் ஐஸ்வர்யா
இந்நிலையில் அவர் அடுத்ததாக சிம்பு அல்லது ராகவா லாரன்சை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது பாலிவுட்டில் தனது அடுத்த ப்ராஜக்ட் குறித்த அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா. இந்த புதிய படத்திற்காக அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்
தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஐஸ்வர்யா. இன்றைய தினம் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தன்னுடைய நாள் எப்போதுமே காபியுடன்தான் துவங்கும் என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய நாட்கள் ஷூம் மீட்டிங், ஸ்கிரிப்ட் ரைட்டிங், தங்கையுடன் தொடர்பு என்று சிறப்பாக போவதாக தெரிவித்துள்ளார்.

மிகவும் கடினமானது
மேலும் தன்னுடைய பிள்ளைகளின் பேரண்ட் டீச்சர் மீட்டிங்கிலும் தான் கலந்து கொள்வதாகவும் இருப்பதிலேயே இதுதான் கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய தலைமுடி மோசமாக காணப்படுவது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் சிறப்பாக துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஐஸ்வர்யா, ரசிகர்களின் வெள்ளிக்கிழமை எப்படி ஆரம்பித்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











