சிறுநீரை குடித்த சூர்யா பட நடிகர்.. அய்யய்ய எதுக்கு தெரியுமா?.. இது என்னங்க புது உருட்டா இருக்கு
மும்பை: பாலிவுட் திரையுலகில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் பரேஷ் ராவல். ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்திருக்கும் அவர் சூரரைப் போற்று திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். நன்றாக நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து தமிழில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதேசமயம் ஹிந்தியில் படு பிஸியாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலைமையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையில் பிறந்தவர் பரேஷ் ராவல். 1985ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் என்ற ஹிந்தி படத்தில் முதன்முறையாக நடிகராக அறிமுகமானார் அவர். அதேபோல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சீரியலிலும் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதன்படி அவர் நடித்த நாம் என்ற திரைப்படம் 1986ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்தார் அவர்.
வரிசையாக படங்கள்: அதன்படி மிர்ச் மசாலா, உத்தர் தக்ஷின், கப்சா, ராம் லகான் என 80களில் பாலிவுட்டில் தவிர்க்க முடியாது குணசித்திர, வில்லன், காமெடி நடிகராக மாறினார் பரேஷ். அவரது நடிப்புக்கென்று பலரும் ரசிகர்களாக மாற தொடங்கினார்கள். பாலிவுட்டில் பெரிய தலைகளின் படங்களிலும் பரேஷ் தவறாமல் நடித்தார். எனவே இந்தியா முழுவதும் ஃபேமஸ் ஆகவும் செய்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது வென்ற பரேஷ்: சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த அவர் 1993ஆம் ஆண்டு வெளியான சார் படத்துக்காகவும், 1994ஆம் ஆண்டு வெளியான வோ சோக்ரி என்ற படத்துக்காகவும் சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதை வரிசையாக இரண்டு ஆண்டுகள் வென்று கெத்து காண்பித்தார். தேசிய விருதுகள் மட்டுமின்றி பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளையும் அவர் ஏகப்பட்ட முறை பெற்றிருக்கிறார். இவருக்கு மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தமிழில் அறிமுகம்: ஹிந்தியில் பிஸியாக நடித்துவந்தாலும் தமிழ் மொழியில் அறிமுகமாகாமல் இருந்த அவரை இயக்குநர் சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்துக்காக கோலிவுட் அழைத்து வந்தார். பரேஷ் என்கிற ரோலையே ஏற்றிருந்த அவர் ஒரு உச்ச பணக்காரருக்குரிய உடல் மொழியில் வில்லனாக நடித்து அப்ளாஸை அள்ளினார். தொடர்ந்து கோலிவுட்டில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இங்கு அடுத்தடுத்து கிடைக்கவில்லை.
பரேஷ் கொடுத்த பேட்டி: இந்நிலையில் பரேஷ் ராவல் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில், "ஒரு படத்தின் ஷூட்டிங்கில் எனக்கு காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்த சமயம் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் என்னை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
சிறுநீரை குடித்தேன்: அவர் என்னிடம் சீக்கிரம் குணமடைய வேண்டுமென்றா உன்னுடைய சிறுநீரை நீயே குடி என்றும்; மது, சிகரெட், அசைவம் ஆகியவைகளை தவிர்த்துவிடு என்றும் கூறினார். அவர் சொன்னபடியே தினமும் காலை எழுந்ததும் என்னுடைய சிறுநீரை பீர் குடிப்பது போல் ஒரே மூச்சாக குடித்துவிடுவேன்.15 நாட்கள் தொடர்ந்து நான் அப்படி செய்துவந்தேன். பிறகு மருத்துவர்கள் என்னுடைய எக்ஸ்ரேவை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். விரைவிலேயே குணமடைந்துவிட்டேன். அதாவது டிஸ்சார்ஜ் ஆக இரண்டு மாதங்கள் என்று சொன்னார்கள். ஆனால் நான் ஒன்றரை மாதங்களிலேயே டிஸ்சார்ஸ் ஆகிவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











