பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன் படத்தோட ஷூட்டிங் அதுக்குள்ள ஓவரா.. ப்பா. செம ஸ்பீடு!

சென்னை: 'ஜமா' படத்தின் மூலம் அறியப்பட்ட பாரி இளவழகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. Million Dollar Studios மற்றும் Neo Castle Creations ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான கதைக்களங்களை வழங்கி வரும் Million Dollar Studios, 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு தனது ஏழாவது தயாரிப்பாக இதை உருவாக்கியுள்ளது.

Pari Ilavazhagan and Ramya Ranganathan movie shoot wrapped up

Million Dollar Studios சார்பில் யுவராஜ் கணேசன், Neo Castle Creations சார்பில் சத்யா கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியதோடு, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷ் இயக்கத்தில் உருவான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுநீள கதாபாத்திரத்தில் மீண்டும் திரைக்கு வருகிறார். இவருடன் சேத்தன், பிரபலமான யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

'மண்டேலா', 'மாவீரன்' புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் படத்திற்கு இசையமைக்க, 'அருவி', 'சக்தி திருமகன்' புகழ் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பைப் பார்த்தா மேற்கொள்ள, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டுள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனித்துள்ளார்.

சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஜாலியான ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இது கதைக்களத்திலும், கதாபாத்திர தேர்விலும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், இத்திரைப்படம் 2026 கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் சரியான வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: jama kollywood new movie neek
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X