தமிழ்நாட்டில் தமிழ் பேசுவது திணிப்பா? பிரதீப் ரங்கநாதனை விளாசிய பாரி சாலன்.. என்ன ஆச்சு?

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் விழா சென்னையில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிலையில், அங்கே மாணவர்களுடன் கலந்துரையாடும் போது ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், படக்குழுவும் ஆங்கிலத்தில் பதில் அளித்தனர். அப்போது தொகுப்பாளர்கள் தமிழில் பேசலாமே என்று சொன்ன போது, அவர்களுக்கு தமிழ் தெரியாது என்றும் எந்த மொழியை திணித்தாலும் திணிப்பு தான் என பிரதீப் ரங்கநாதன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தமிழில் பேச சொன்னால் கூட திணிப்பு என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும் என்றும் பராசக்தி படத்தில் கூட சிவகார்த்திகேயன் இந்திக்காரர் தமிழ்நாட்டில் வந்து வேலை செய்தால் தமிழில் பேச வேண்டும் என சொல்வாரே என நெட்டிசன்கள் ரவுண்டு கட்ட ஆரம்பித்து விட்டனர்.

Pari Saalan slams Pradeep Ranganathan and quoted Seeman for Tamil imposition row

படத்தில் நடித்துள்ள சீமான் இதற்கு எதுவும் வாய் திறக்க மாட்டாரா என ட்ரோல்கள் கிளம்பிய நிலையில், தற்போது பாரி சாலன் பிரதீப் ரங்கநாதனுக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழ் பேசினால் திணிப்பா?: "தமிழ்நாட்டில் தமிழில் பேசுங்கள் என்று சொல்வது திணிப்பு அல்ல! அது தமிழர்களின் உரிமை.. தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில், ஹிந்தியில் மற்றும் தெலுங்கில் பேசுவது தான் திணிப்பு! சீமான் அவர்களோடு பழகியும் பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த அடிப்படை புரியவில்லை.." என பாரி சாலன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டென்ஷனான நயன்தாரா: பிரதீப் ரங்கநாதன் பேசியது ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்த இன்னொரு புறம் படத்தின் தயாரிப்பாளரான நயன்தாரா நிகழ்ச்சிக்கு வரும் போது அவருடைய அனுமதியின்றி வீடியோ எடுத்த நிலையில், முகத்தை மூடிக் கொண்டு சென்றதும், வீடியோ எடுக்கக் கூடாது என்று சொன்னதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வீடியோ எடுக்கக் கூடாது என்றால் நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்களை ஏன் அழைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நயன்தாராவை ஒரு வார்த்தை பேச சொன்ன நிலையிலும், அவர் எதுவுமே பேசாமல் கை எடுத்துக் கும்பிட்டுக் கிளம்பியது ஏன் என்கிற கேள்விகளும் சர்ச்சையை கிளப்பி உள்ளன.

பாவம் விக்னேஷ் சிவன்: இந்த முறை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ஏப்ரல் 10ம் தேதி லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளியாகி வெற்றிபெற வேண்டும் என விக்னேஷ் சிவன் உருக்கமாக பேசிய நிலையில், இதுபோன்ற சர்ச்சைகள் படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X