பரிமளா அண்ட் கோ 2-வது நாள் பாக்ஸ் ஆபீஸ்.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் செம்ம 'டார்க் காமெடி!

சென்னை: திரையுலகின் எவர்கிரீன் காம்போவான ஜெயராம் மற்றும் ஊர்வசி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம் 'பரிமளா அண்ட் கோ'. இந்தபடம் தியேட்டர்களில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளை விட இரண்டாம் நாளான சனிக்கிழமை நேற்று படத்தின் வசூல் அதிரடி வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சேக்னில்க் (Sacnilk) தகவல்படி, 'பரிமளா அண்ட் கோ' திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் ₹1.60 கோடி வசூலித்திருந்தது. ஆனால், பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இரண்டாம் நாளில் வாசகர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, ₹1.92 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இரண்டு நாள் முடிவில் இந்தியாவின் ஒட்டுமொத்த வசூல் ₹3.52 கோடியாகவும், கிராஸ் வசூல் ₹4.05 கோடியாகவும் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

Parimala and Co Box Office
Photo Credit:

கதை என்ன? : 'பரிமளா அண்ட் கோ' படம் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நடக்கும் குழப்பங்களையும், அசாதாரண சூழ்நிலைகளையும் மையமாகக் கொண்ட ஒரு அருமையான 'டார்க் காமெடி' திரைப்படமாகும். இன்னும் எளிமையாகச் சொன்னால், சூப்பர் ஹிட் 'பாபநாசம்' படத்திற்கு ஒரு கலகலப்பான ட்விஸ்ட் கொடுத்தால் எப்படி இருக்குமோ, அதுதான் இந்த 'பரிமளா அண்ட் கோ'. குடும்பத்திற்குள் நடக்கும் ஈகோ சண்டைகள், எமோஷனல் தருணங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவையோடு கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குநர் பாண்டியராஜ்.

ஜெயராம் - ஊர்வசி மேஜிக் : இந்த படத்தை பார்த்த பலர் 5-க்கு 3 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து பாராட்டி உள்ளனர். குறிப்பாக ஜெயராம் மற்றும் ஊர்வசியின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி, நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களுக்கு ஒரு பழைய நினைவலைகளைக் கொண்டு வந்துள்ளது. யோகி பாபு சிறிய ரோலில் வந்தாலும் தனக்கே உரிய பாணியில் அடிக்கும் கலகலப்பான கவுண்டர் ஜோக்குகள் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளன. தியேட்டருக்குச் செல்லும் ரசிகர்களைக் கவலையை மறந்து சிரிக்க வைக்கும் ஒரு கியாரண்டி படமாக இந்த படம் அமைந்துள்ளது. ஊர்வசி, ஜெயராம், மிஷ்கின், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி மாஸ்டர், சந்தோஷ் சோபன், ஆனந்திகா, சிங்கம்புலி, பட்ஸ் என பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X