Parimala And Co Day 5 Box Office - பரிமளா அண்ட் கோ 5வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் தள்ளாடுதே

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பரிமளா அண்ட் கோ. கடந்த ஐந்தாம் தேதி வெளியான இப்படத்துக்கு ஓரளவு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே பெற்றிருக்கிறது. குடும்பமாக சென்று பார்க்கலாம் என்ற எண்ணமும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. விமர்சன ரீதியாக ஓரளவு நல்ல ரிசல்ட்டை பெற்ற அந்தப் படம்; வசூலில் இருக்கும் நிலைமைதான் கொஞ்சம் பின்னடைவாக இருக்கிறது. இந்நிலையில் ஐந்து நாட்களில் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

சேரனிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டிராஜ் பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அவரது படம் என்றாலே உறவுகளுக்குள் நடக்கும் சிக்கல்களும், குடும்ப விஷயங்களும் இருக்கும். இதன் காரணமாக அவரது படங்களுக்கு எப்போதும் குடும்பங்களிடம் டிமாண்ட் இருக்கும். இப்போது அவர் இயக்கியிருக்கும் திரைப்படம் பரிமளா அண்ட் கோ.

Parimala And Co Box Office Collection Day 5 Pandiraj s Film Earns Just 64 Lakh Crosses 7 Crore
Photo Credit:

பரிமளா அண்ட் கோ: இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கொலையை ஒரு குடும்பம் எப்படி மறைக்கிறது; அதிலிருந்து மீண்டதா இல்லையா என்பதை நகைச்சுவைகளை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர். லைகா நிறுவனமும், பசங்க புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கின்றன. கடந்த 5ஆம் தேதி படமானது தியேட்டர்களில் கோலாகலமாக ரிலீஸானது.

Also Read
Peddi Day 6 Box Office - பெத்தி 6வது நாள் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆஃபிஸில் கெத்து காண்பிக்குது
Peddi Day 6 Box Office - பெத்தி 6வது நாள் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆஃபிஸில் கெத்து காண்பிக்குது

எப்படி இருந்தது படம்?: ஏற்கனவே ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றதால் படத்துக்கு ஹைப் இருக்கத்தான் செய்தது. அந்த ஹைப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் திருப்தியோடுதான் வெளியே வந்தார்கள். பாண்டிராஜ் தனக்கு வசதியான ஜானரிலிருந்து வெளியே வந்து; வேறு மாதிரி ட்ரை செய்திருக்கிறார். இதுவும் அவருக்கு நல்லபடியாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று முதல் சில நாட்கள் ரசிகர்கள் புகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளாக நாளாக டல்: குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கும் சென்றார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாளாக நாளாக பரிமளா அண்ட் கோவுக்கான மவுசு ரசிகர்களிடம் குறைய தொடங்கியிருக்கிறது. குறிப்பாக பாபநாசம் படத்தின் ஒன்லைனை தனக்கு ஏற்றபடி மாற்றி படம் எடுத்து வைத்திருக்கிறார் எனவும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது வேறு இது வேறு என்றும் பலர் கூறுகிறார்கள். படம் படுதோல்வியடையவில்லைதான். ஹிட்தான். இருந்தாலும் பாண்டிராஜ் கடைசியாக இயக்கிய தலைவன் தலைவி அளவுக்கு பரிமளா அண்ட் கோ ஹிட்டாகவில்லை என இன்டஸ்ட்ரியில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

வசூல் நிலவரம் என்ன?: இந்நிலையில் அந்தப் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, ஐந்தாவது நாளான நேற்று அந்தப் படம் 64 லட்சம் ரூபாயை மட்டும்தான் மொத்தமாகவே வசூலித்ததாம். முதல் மூன்று நாட்களில் கோடிகளில் வசூலை அள்ளிய அந்தப் படம் நான்கு, ஐந்தாவது நாட்களில் லட்சங்களில் மட்டுமே வசூலிக்கிறது. இதுவரை 7 கோடி ரூபாய் வரைதான் பரிமளா அண்ட் கோ மொத்தம் வசூலித்திருப்பதாக அந்த வலைதளம் தெரிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X