Parimala & Co Day 4 Box Office - பாக்ஸ் ஆஃபிஸில் படுத்துவிட்ட பரிமளா & கோ.. 4வது நாள் வசூல் செம டல்

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி உள்ளிடோர் லீடு ரோலில் நடித்திருக்கும் திரைப்படம் பரிமளா & கோ. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படம் ரிலீஸான சில நாட்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது. ஆனால் போகப்போக விமர்சனங்கள் ரூட்டை மாற்ற; தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸும் ரூட்டை மாற்றினார்கள். இதனால் கூட்டமும், வசூலும் ரொம்பவே குறைந்திருக்கிறது.

குடும்பங்களுக்குள் நடக்கும் விஷயங்கள், உறவு சிக்கல்களை வைத்து படம் எடுப்பவர் பாண்டிராஜ். அவர் அப்படி எடுத்த படங்கள் பெரும்பாலானவை பலரால் ரசிக்கும்படியாகவே இருந்தன. அவர் இப்போது தன்னுடைய அந்த ஜானரிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து; கொலையை மறைக்கும் ஒரு குடும்பத்தை வைத்து பரிமளா & கோ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.லைகா, பசங்க புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கின்றன.

Parimala And Co Day 4Box Office Collection Pandiraj s Film Suffers Sharp Drop in Collections
Photo Credit:

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. ஜெயராமும், ஊர்வசியும் லீடு ரோலில் நடித்திருக்கிறார்கள். தமிழில் ஊர்வசி ஜே பேபி படத்துக்கு பிறகு நடித்திருக்கிறார். அவர்களுடன் மிஷ்கின், சஞ்சனா, சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இவ்வளவு நடிகர்கள் நடித்திருப்பதாலும், பாண்டிராஜின் இயக்கம் என்பதாலும் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. ட்ரெய்லரும் அதை அதிகப்படுத்தியது.

Also Read
பிரேம்ஜி வீட்டில் விசேஷம்.. சிம்பு கணித்ததை சொல்லி கொண்டாடும் மனைவி இந்து
பிரேம்ஜி வீட்டில் விசேஷம்.. சிம்பு கணித்ததை சொல்லி கொண்டாடும் மனைவி இந்து

எப்படி இருக்கிறது படம்?: ப்ரிவ்யூ ஷோவில்கூட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்தது. அந்த ஹைப்போடு கடந்த ஐந்தாம் தேதி தியேட்டர்களில் வெளியான படத்துக்கு முதலில் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தன. ஜானரை மாற்றிய பாண்டிராஜ் இதிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். காமெடியாகவும், அதேசமயம் சுவாரஸ்யம் குறையாமலும் படத்தை கொடுத்திருக்கிறார் என ஆஹோ ஓஹோவென்று புகழ்ந்தார்கள்.

ரூட்டை மாற்றிய ரசிகர்கள்?: இதனால் படக்குழு ரொம்பவே நிம்மதியாக இருந்தார்கள். கண்டிப்பாக வசூலிலும் நல்ல நிலைமையை படம் பெற்றுவிடும் என நம்பினார்கள். இதற்கு முன்னதாக பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளியது. அந்த அளவுக்கு இல்லையென்றாலும் டீசன்ட்டான நம்பர்களை பெறும் எனவும் நினைத்திருந்தார்கள். ஆனால் நாளாக நாளாக படத்துக்கு விமர்சனங்கள் நெகட்டிவ்வாக வர தொடங்கின. இதனால் தியேட்டருக்கு வரும் கூட்டமும் குறைவதாக தியேட்டர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.

வசூலில் எதிரொலி: அதன் எதிரொலியாக வசூலிலும் டல்லடிக்க தொடங்கியிருக்கிறது. Sacnilk வெளியிட்டிருக்கும் தகவல்படி முதல் மூன்று நாட்களில் சூப்பர் வசூலைத்தான் பெற்றது. ஆனால் நான்காவது நாளான நேற்று வெறும் 61 லட்ச்ம ரூபாயை மட்டும்தான் வசூலித்திருக்கிறதாம். இதற்கு முந்தைய மூன்று நாட்கள் சராசரி வசூல் 2 கோடியாக இருந்தது. இப்போது அது அப்படியே சரிந்து பரிமளா & கோவை பாக்ஸ் ஆஃபிஸில் படுக்க வைத்திருக்கிறது. இன்றும் வேலை நாள் என்பதால் மேற்கொண்டு வசூல் குறையலாம் எனவும் தெரிகிறது. இதுவரை மொத்தம் அந்தப் படம் 6.50 கோடி ரூபாய்வரைதான் வசூலித்திருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X