சின்ன கல்லு பெத்த லாபம்.. சத்தமில்லாமல் கல்லா கட்டும் 'பரிமளா அண்ட் கோ'.. உலகளாவிய வசூல் ரிப்போர்ட்

சென்னை: தமிழ் சினிமாவில் எப்போதுமே குடும்பக் கதைகளையும், அதில் சுவாரசியமான திருப்பங்களையும் கொடுப்பதில் வல்லவர் இயக்குனர் பாண்டிராஜ். அந்த வகையில், அவர் எழுதி இயக்கி அண்மையில் ஜூலை 5ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் தான் பரிமளா அண்ட் கோ. ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, டான்ஸ் மாஸ்டர் சாண்டி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம், தற்போது உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகியுள்ளன.

யோகி பாபுவின் கொல வெறி பிளான்: பரிமளா அண்ட் கோ படத்தில் ஜெயராமின் மனைவியாக ஊர்வசி நடித்துள்ளார். இவர்களுக்குச் சஞ்சனா, ஆனந்திகா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவருமே ஏகப்பட்ட குறும்புத்தனம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். இதில் மூத்த மகள் ஒருவரைக் காதலித்து வர, இரண்டாவது மகளான ஆனந்திகாவை அந்தப் பகுதியின் பெரிய ரவுடியான சாண்டி விரட்டி விரட்டித் துரத்திக் காதலிக்கிறார். ஆனந்திகா எங்குச் சென்றாலும் சாண்டி பின்னாலேயே சென்று வம்பு வளர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சாண்டி ஏகப்பட்ட ஆள் பலம் கொண்ட பெரிய ரவுடி என்பதால், ஜெயராமால் அவரை எதிர்த்துப் பேச முடியாமல் குடும்பமே தவிக்கிறது.

Parimala and Co box office
Photo Credit:

விறுவிறுப்பான கதை: கதையின் திருப்புமுனையாக, ஒரு கட்டத்தில் சாண்டி ஜெயராமின் மகளிடம் அத்துமீறி முத்தம் கொடுத்து விடுகிறான். இதனால் ஆத்திரமும் அவமானமும் அடையும் ஜெயராம், சாண்டியை நம்மால் நேருக்கு நேர் எதிர்க்க முடியாதே, இப்போது என்ன செய்வது? என உடைந்து போகிறார். அதேநேரம், சாண்டியால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுப் பழிவாங்கத் துடிக்கும் யோகி பாபுவை ஜெயராம் சந்திக்கிறார். அனைவரும் சேர்ந்து ரவுடி சாண்டியைத் தீர்த்துக்கட்டிவிடலாம் எனத் திட்டம் தீட்டுகின்றனர். ஆனால், இவர்களின் பிளான் படி சாண்டியைப் போடுவதற்கு முன்பே, சாண்டி மர்மமான முறையில் யாரோ ஒருவரால் கொடூரமாகக் கொல்லப்படுகிறார். சாண்டியைப் போட்டது யார்? அந்த மர்மக் கொலைக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? என்ற விறுவிறுப்பான க்ரைம்-காமெடி பாணியில் படம் நகர்கிறது.

பாக்ஸ் ஆபிஸ்: படம் வெளியாகி தியேட்டர்களில் கலவையான மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், இதன் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பரிமளா அண்ட் கோ படம் உலகளவில் இதுவரை ரூ. 19 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த அதிரடி வசூலின் மூலம், இப்படம் தயாரிக்கப்பட்ட ஒட்டுமொத்த பட்ஜெட்டில் இருந்து சுமார் 95% சதவீதப் பணத்தை தியேட்டர் ரிலீஸ் மூலமாகவே ரிக்கவரி செய்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இப்படம் முழு லாபத்தை நோக்கி நகரும் என்பதால் படக்குழுவினர் செம குஷியில் இருக்கிறார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X