பரிணித்திக்கு கழுத்துல சுளுக்கு.. இவங்களாவது சாய்னா பயோபிக் கம்ப்ளீட் பண்ணுவாங்களா?

மும்பை: பாலிவுட் நடிகை பரிணித்தி சோப்ராவுக்கு கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக சாய்னா நேவால் பயோபிக் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படத்தை அமோல் குப்தா இயக்கி வருகிறார்.

பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகை பரிணித்தி சோப்ரா சாய்னா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக நடிகை ஷ்ரத்தா கபூர் சாய்னா நேவால் பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது.

சாய்னா நேவால்

பாட்மின்டன் விளையாட்டில் இந்திய அணிக்கு முதல் வெண்கல பதக்கத்தை ஒலிம்பிக்கில் பெற்றுத் தந்து பெருமை சேர்ந்த வீராங்கனை சாய்னா நேவால். அவரது வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாக உருவாகி வருகிறது. அமோல் குப்தா இயக்கத்தில் உருவாகி வரும் சாய்னா நேவால் பயோபிக் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

முதலில் இந்த படத்தில் கமீட்டானது ஷ்ரத்தா கபூர் தான். ஆனால், நடுவில் அவருக்கு ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் காரணமாக சாய்னா பயோபிக்கில் தொடர முடியாமல் போனது. ஷூட்டிங் கால்ஷீட்டுகள் வீணாக போகாமல் இருப்பதற்காக, நாயகி பரிணித்தி சோப்ராவை சாய்னாவாக நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

30 நாள்

சாய்னா நேவாலாக நடிப்பதே இவ்வளவு கஷ்டம் என்றால், அவருடைய வாழ்வில் அவர் எவ்வளவு கஷ்டம் அனுபவித்து இருப்பார் என்பது நம்மை விட பரிணித்திக்கு நன்றாக தெரிந்திருக்கும். ஷூட்டிங்கின் போது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக 30 நாள் நீண்ட ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஃப்ரோஸன் 2

சாய்னா நேவாலாக பரிணித்தியை நாம் காண்பதற்கு முன்னதாக ஆன்னா குரலில் திரையில் விருந்தளிக்க உள்ளார் பரிணித்தி சோப்ரா. டிஸ்னியின் பிரம்மாண்டமான தயாரிப்பான ஃப்ரோஸன் 2 திரைப்படம் அடுத்த வாரம் நவம்பர் 22ம் தேதி திரைக்கு வருகிறது. ஹிந்தி வெர்ஷனில் எல்சாவாக பிரியங்காவும் ஆன்னாவாக அவரது தங்கை பரிணித்தி சோப்ராவும் குரல் கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: parineeti chopra saina nehwal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X