நோ மீன்ஸ் நோ.. அஜித் பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை.. கோபத்தில் தல ரசிகர்கள்!
கால்ஷீட் பிரச்சினையால் அஜித்தின் வலிமை பட வாய்ப்பை பாலிவுட் நடிகை பரிநீதி சோப்ரா நிராகரித்துவிட்டார்.
சென்னை: அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க முடியாது என பிரபல பாலிவுட் நடிகை பரிநீதி சோப்ரா கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படம் வலிமை, முந்தைய படத்தை இயக்கிய எச்.வினோத் தான் இந்த படத்தையும் இயக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் பூஜையுடன் தொடங்கியது. அஜித் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. நேர்கொண்ட பார்வை படத்தை போலவே இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகளில் ஒருவரை நடிக்க வைக்க போனி கபூர் விரும்புவதாக தெரிகிறது.
அதன்படி இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் பரிநீதி சோப்ராவிடம் வலிமை படத்தை நடிக்க கால்ஷீட் கேட்டு தயாரிபாளர் தரப்பில் அணுகினார். ஆனால் தான் பிஸியாக நடித்து வருவதால், டேட்ஸ் இல்லை எனக் கூறி வலிமை பட வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரிநீதி சோப்ராவின் இந்த முடிவு அஜித் ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. தான் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பரிநீதி முடிவு எடுத்துள்ளதாக அவர்கள் வருத்தப்படுகின்றனர்.
நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவுப் பெண் தான் பரிநீதி சோப்ரா. இங்கிலாந்தில் வர்த்தகம் தொடர்பாக பட்டப்படிப்பு முடித்துள்ள பரிநீதி, பிரியங்காவை பார்த்து தான் நடிக்க வந்தார். ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளிவந்த லேடிஸ் வெர்சஸ் ரிக்கி பால் படம் தான் பரிநீதியின் முதல் படம்.
தனது இரண்டாவது படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதினை பரிநீதி சோப்ரா பெற்றார். தற்போது சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில், சாய்னாவாக பரிநீதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











