உன் பொண்டாட்டியை விரட்டிடுவ.. அம்மாவ ஒதுக்கி வச்சிடுவ.. பரிதாபங்கள் கோபி, சுதாகர் திடீர் அட்டாக்!

சென்னை: விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து கேட்டிருக்கும் விஷயம் தலைப்பு செய்தியாக கடந்த சில வாரங்களாகவே இருக்கிறது. போதாக்குறைக்கு திரிஷாவுடன் வேறு விஜய் ஜோடியாக வந்து; எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார். அதுமட்டுமின்றி விஜய் தன்னை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறார் என்ற சங்கீதாவின் இரண்டாவது மனுவும்; இந்த பிரச்னையெல்லாம் வொர்த் இல்லை என்ற விஜய்யின் அலட்சிய பேச்சும் மேற்கொண்டு இவ்விவகாரத்தில் பரபரப்பை கூட்டின.

விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா; 26 வருடங்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து கேட்டிருக்கிறார். அவர் விவாகரத்து கேட்டதோடு மட்டுமின்றி; விஜய் மீது வைத்திருந்த குற்றச்சாட்டுக்கள் பகீர் கிளப்பின. அவர் சொன்னதெல்லாம் உண்மைதானோ என்று நினைக்கும் அளவுக்கு விஜய்யின் செயல்பாடும் அமைந்துவிட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் திரிஷாவுடன் அவர் ஜோடியாக வந்தது தவெகவினருக்கே உச்சக்கட்ட அதிர்ச்சி. போதாக்குறைக்கு விஜய்க்கு எதிராக இரண்டாவது மனுவையும் தாக்கல் செய்தார் சங்கீதா.

Parithabangal Duo s Viral Video Targets Vijay Amid Divorce Controversy
Photo Credit:

இரண்டாவது மனுவில் சொல்லப்பட்டிருப்பது: அந்த மனுவில், 'நான் பிரிட்டன் பிரஜை. இங்கே தங்குவதற்கு எனக்கு வீடு இல்லை. விஜய் தன்னுடைய நீலாங்கரை பங்களாவில் என்னை அனுமதிக்க மறுக்கிறார். எனவே அவர் என்னை தங்குவதற்கு அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவித்திருந்தார். தன்னுடன் குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகளை பெற்றவரையே வீட்டுக்குள் விடுவதற்கு விஜய் மறுக்கிறாரே என அடுத்தக்கட்ட அதிருப்தி அவர் மீது பலமாக எழுந்தது.

உச்சக்கட்ட அலட்சியம்: இதெல்லாம் பத்தாது என்று; சில நாட்களுக்கு முன்பு நடந்த தவெக மகளிர் அணி கூட்டத்தில் பேசியபோது, 'இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பிரச்னைக்காக நீங்கள் போராடி ஹர்ட் ஆவதை பார்த்து எனக்கு ஹர்ட் ஆகிறது. நீங்கள் இதை நினைத்தெல்லாம் ஃபீல் செய்யாதீர்கள். அவ்வளவுக்கு அது வொர்த் இல்லை' என உச்சக்கட்ட அலட்சியத்தோடு பேசினார். அதுவும் கடும் கண்டனங்களை அவருக்கு சம்பாதித்து கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
கீர்த்தி சுரேஷ் திருமணம்னா போவார்.. திரிஷாவுக்கு வாய் திறக்கமாட்டார்.. விஜய் மீது ப்ளூ சட்டை மாறன் அட்டாக்
கீர்த்தி சுரேஷ் திருமணம்னா போவார்.. திரிஷாவுக்கு வாய் திறக்கமாட்டார்.. விஜய் மீது ப்ளூ சட்டை மாறன் அட்டாக்

பலமான எதிர்ப்பு: விஜய் விவகாரத்தை பொறுத்தவரை பெரும்பாலானோர் அவருக்கு எதிர் நிலையிலேயே இருக்கிறார்கள். பலர் தங்களது ஆதங்கத்தை வீடியோவாகவும் வெளியிட்டுவருகிறார்கள். இந்நிலையில் பரிதாபங்கள் கோபி, சுதாகர் புது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது சுதாகர் பெண்கள் தின வாழ்த்து சொல்வது போனும்; அதற்கு கோபியோ, 'உங்கள் வீட்டில் யாருமே இல்லை. மனைவி சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு போய்விடுவார். அம்மாவும் தங்கச்சி வீட்டுக்கு போய்டுவாங்க.

வீட்டு பெண்ணை மதியுங்கள்: நீங்கள் ஃபெமினிஸம் பேசுவீர்களா?.. வாழ்க்கையில் ஃபெமினிஸமாக எதுவும் செய்யவில்லை. பேச்சில் மட்டும்தான் செய்கிறாய். பெண்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்றால் வீட்டிலிருந்து தொடங்கு. அதற்கு பிறகு நாட்டுக்கு வரலாம். விளம்பரத்துக்காக இதெல்லாம் செய்கிறாயா?' என கேள்வி கேட்கும்படி காட்சிகள் அந்த வீடியோவில் அமைந்திருக்கின்றன. அதனைப் பார்த்த ரசிகர்களோ, 'இந்த வீடியோவில் விஜய்யைத்தான் தாக்கி பேசியிருக்கிறார்கள். பெயரை வெளிப்படையாக சொன்னாலோ; விஜய்யை குறிக்கும் வகையில் ஏதாவது குறியீடு வைத்தாலோ விர்ச்சுவல் வாரியர்ஸ் தங்களது குடும்பத்தை பற்றி கேவலமாக பேசுவார்கள் என பயந்துதான்; பெயர் எதையும் குறிப்பிடாமல் மறைமுகமாக விஜய்யை அட்டாக் செய்திருக்கிறார்கள்' என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X