Napoleon Son: நடுரோட்டுல நின்னோம்.. நெப்போலியன் மகனிடம் கஷ்டத்தை சொன்ன பரிதாபங்கள் கோபி - சுதாகர்!
அமெரிக்கா: நடிகர் நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷ்க்காக குடும்பமாகவே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது திருமணத்திற்கு கூட பிரபலங்கள் இங்கிருந்து புறப்பட்டு ஜப்பானுக்குச் சென்றார்கள். பல கோடிகள் செலவில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார் நெப்போலியன். இந்நிலையில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷைப் பார்க்க, அவர்களது அமெரிக்க வீட்டிற்கு பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் சென்று பார்த்துள்ளார்கள். இது தொடர்பான வீடியோவை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நெப்போலியன் பகிர்ந்துள்ள வீடியோவுக்கு, " அன்பு நண்பர்களே, தமிழ்ச் சொந்தங்களே வணக்கம்..! சென்ற வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற FeTNA நிகழ்ச்சியில் கலந்து கொள்தற்காக வருகை தந்த இன்றைய இளைய தலைமுறைகள் அதிகம் விரும்பி பார்க்கும் You Tube -ல் தொடர்ந்து வரும் பரிதாபங்கள் என்ற நிகழ்ச்சியின் கதாநாயகர்கள், கோபி & சுதாகர் இருவரையும் நானும் FeTNA நிகழ்ச்சிக்கு சென்றதால் சந்திக்க முடிந்தது..! எங்கள் முத்த மகன் தனுஷ்க்கு மிகவும் பிடித்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டிற்கு அழைத்திருதந்தேன்...! எனது அழைப்பை ஏற்று எங்கள் வீட்டிற்க்கு வருதை தந்து தனுஷ்க்கு மகிழ்ச்சியையும், எங்களுக்கு மனநிறைவையும் தந்தார்கள்...! நன்றி...!" என கேப்ஷனும் இட்டுள்ளார்.

பரிதாபங்கள் கோபி - சுதாகர்: தனுஷைச் சந்தித்ததும் நலம் விசாரித்த கோபி மற்றும் சுதாகர், ஏற்கனவே சந்திக்கலாம் என நினைத்தோம், ஆனால் சந்திக்க முடியவில்லை. ஒரு வழியாக கிளம்பி ஓடி வந்துவிட்டோம். நாங்க முன்னாடியே வர வேண்டியது, ஆனால் விமானத்தில் பெட்ரோல் இல்லை என நான்கு மணி நேரம் தாமதமாகிவிட்டது என சிரித்துக் கொண்டே பகிர்ந்து கொண்டார்கள். அதற்கு உடன் இருப்பவரோ, அமெரிக்கா வந்துமே பெட்ரோல் இல்லையா என நகைச்சுவையாக கிண்டல் அடித்தார்.
தீவிர ரசிகர்: பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த நெப்போலியன் மகன் தனுஷ், பரிதாபங்கள் சேனலுக்கும் உங்கள் இருவருக்கும் தான் மிகப்பெரிய ரசிகர் எனத் தெரிவித்தார். தினமும் உங்களது சேனலை பார்த்துக் கொண்டே இருப்பேன். புது வீடியோ எப்போது போடுவீர்கள் என செக் செய்து கொண்டே இருப்பேன் எனக் கூறினார். இந்த சந்திப்பில் ஜாலியாக பேசி மகிழ்ந்தது மட்டும் இல்லாமல், ஒன்றாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் எடுத்துக் கொண்டார்கள். அவை தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ்: ஏற்கனவே நடிகர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், நெப்போலியன் மகன் தனுஷைச் சென்று சந்தித்த வீடியோவை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ், மஸ்குலர் டிஸ்ட்ரோபி எனப்படும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது ஒரு மரபணு குறைபாடு ஆகும். இதன் காரணமாக தசைகள் படிப்படியாக வலுவிழந்து, உடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். இந்த நிலையினால், தனுஷ் அன்றாட நடவடிக்கைகளை செய்து வருகிறார். அவருக்கு அவரது பெற்றோர்களும் மனைவி அக்ஷயாவும் உதவி வருகிறார்கள். இவர்களின் திருமணம் ஜப்பானில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணம் மிகப்பெரிய செய்தியாக உருவெடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











