ஒருவழியா படத்தை முடிச்சிட்டோம்.. பரிதாபங்கள் கோபி - சுதாகரின் அலப்பறையை காண ரெடியா!

சென்னை: மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி சுதாகர் ஏகப்பட்ட பரிதாபங்கள் வீடியோவை வெளியிட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கான தனி இடத்தை பிடித்து விட்டனர்.

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் இருந்து வெளியேறிய நிலையில் பரிதாபங்கள் என்றே தனியாக யூடியூப் சேனலை ஆரம்பித்தனர். தொடர்ந்து அந்த யூடியூப் சேனலில் காமெடி வீடியோக்களை கோபி மற்றும் சுதாகர் கொடுத்து வந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளனர்.

Parithabangal Gopi and Sudhakar movie wraps up video out now

சினிமாவில் பரிதாபங்கள் கோபி - சுதாகர்: ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு விஜயின் மெர்சல் யாஷிகா ஆனந்த் நடித்த ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் காமெடியாக சிறு காட்சிகளில் நடித்துள்ளனர். அதன் பின்னர் தனியாகவே கிரவுட் ஃபண்டிங் மூலம் பணத்தை திரட்டி சுமார் 6 கோடி பட்ஜெட்டில் மணி கம் டுடே கோ டுமாரோ என்கிற படத்தை ஆரம்பித்தனர். பல ஆண்டுகள் ஆகியும் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், அந்தப் படத்தை உருவாக்க மேலும் அதிக பணம் தேவைப்படுகிறது என்று கூறி அடுத்த படத்தை ஆரம்பித்தனர்.

Parithabangal Gopi and Sudhakar movie wraps up video out now

இரண்டாவது படம் ரெடி: முதல் படம் முடியாத நிலையில் இரண்டாவதாக தொடங்கிய படத்தை தற்போது வெற்றிகரமாக கோபி மற்றும் சுதாகர் முடித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விஷ்ணு விஜயன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சார்லி சாப்ளின் போல மற்றும் சுதாகர் வேடம் அணிந்து நடித்துள்ள காட்சிகளும் தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் இடம் பெற்றுள்ளன. மேலும் மாஸ்டர் படத்தை போல கல்லூரியில் மாணவர்கள் கோஷ்டியுடன் நடக்கும் சண்டையும் நட்பும் இந்தப் படத்தின் பிரதானமாக இருக்கும் என்பதை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ உணர்த்துகிறது.

ஹிட் அடிக்குமா: சமீபத்தில் பிளாக் ஷீப் தயாரிப்பில் புட் சட்னி பிரபலம் ராஜமோகன் இயக்கத்தில் வெளியான பா பா பிளாக் ஷீப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகரின் படம் வரும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த படம் பரிதாபங்கள் யூடியூப் வீடியோக்களை போலவே ரசிகர்களை நிச்சயம் என்டர்டெயின் பண்ணும் என்கிற நம்பிக்கையுடன் கூடிய விரைவில் படத்தை வெளியிட கோபி - சுதாகர் திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X