அஜித்திடம் மன்னிப்பு கேட்ட பரிதாபங்கள் கோபி.. இதெல்லாம் தப்பு இல்லையா?

சென்னை: நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்திற்குப் பின்னர் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. ஒரு புறம் கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்தாலும், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அஜித்தின் அடுத்த படத்திற்கான தயாரிப்பாளரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கும்போது நடிகர் அஜித்குமாரிடம் பரிதாபங்கள் கோபி மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் மீது தீராத காதல் கொண்டவர். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரது அஜித் குமார் ரேஸிங் அணி சர்வதேச அளவிலான கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றிகளைக் குவித்து, பதக்கங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் அவரிடம் பரிதாபங்கள் கோபி மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Parithabangal Gopi Ask Apology To Ajith Kumar For His Worst Comments About Ajith Kumar Car Race Accident

கார் ரேஸ்: அதாவது ஸ்டிமிலேட்டரில் கார் ஓட்டிக் கொண்டு இருக்கும் கோபி, அதில் ரேஸ் காரை சரியாக ஓட்ட முடியாமல் திணறுகிறார். உடனே அருகில் இருந்த சுதாகரும் டிராவிட்டும் சிரிக்கிறார்கள். மேலும், ஸ்டிமிலேட்டரில் கார் ஓட்டுவது மிகவும் சவாலனது என்று சுதாகர் கூறுகிறார். அதை அடுத்து, கோபி பேசும்போதுதான் அஜித்திடம் மன்னிப்பு கேட்கிறார். அதாவது, " இந்த நேரத்தில் நான் அஜித்குமார் சாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் கார் ஓட்டுவதைப் பார்த்து எத்தனையோ நாட்கள், வெறுப்பில் இவரு என்னப்பா அடிக்கடி கொண்டு போய் வண்டியை எங்கேயாவது இடித்து விடுகிறார் என்று நினைத்து இருக்கிறேன். எங்களால் ஸ்டிமிலேட்டரிலேயே எதுவும் செய்ய முடியவில்லை. நீங்கள் உண்மையான காரில் என்னென்னமோ செய்கிறீர்கள். உண்மையிலேயே மிகவும் சிரமமான சவாலான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

Parithabangal Gopi Ask Apology To Ajith Kumar For His Worst Comments About Ajith Kumar Car Race Accident

மன்னிப்பு: பரிதாபங்கள் கோபி இவ்வாறு கூறியதை இணையவாசிகள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அஜித் குமார் தனது அணியினருடன் துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது அவரது கார் விபத்துக்குள்ளானது. இது மட்டும் இல்லாமல், அதன் பின்னர் கார் ரேஸில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது அவர் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த கார் மோதியதிலும் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

கடைசி படம்: நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது குட் பேட் அக்லி. இந்த படத்தை அவரது தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. படத்தில் அஜித், த்ரிஷா, சிம்ரன், பிரபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை ஈட்டியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X