பரிதாபங்கள் கோபி, சுதாகருக்கு கொட்டும் பண மழை.. இன்னொரு பக்கம் வழக்கும் குவியுது.. என்ன ஆகுமோ?

சென்னை: சமீபத்தில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபி, சுதாகர் நடித்து வெளியான சொசைட்டி பாவங்கள் வீடியோ வேறலெவலில் வைரலாகி வருகிறது. சின்மயி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த வீடியோவை பார்த்தே ஆக வேண்டும் என சப்போர்ட் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் கோபி, சுதாகர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை சிவகார்த்திகேயன் பாடி கொடுத்துள்ளார். இந்நிலையில், கோபி, சுதாகரை கைது செய்ய வேண்டும் என கோவையில் தேவர் சமூக வழக்கறிஞர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆணவ கொலைகளை குறிப்பிட்ட ஒரு சமூகம் செய்வது போல பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியான சொசைட்டி பாவங்கள் வீடியோவுக்கு ஒரு பக்கம் மக்கள் ஆதரவு கொடுத்து பணமழையை கொட்டி வருகின்றனர்.

Parithabangal Gopi Sudhakar earns more money and cases due to Society Paavangal video
Photo Credit:

இன்னொரு பக்கம் எங்கள் சாதியை தான் இழிவுப்படுத்தி வேண்டுமென்றே அரசியல் தூண்டுதல் காரணமாக கோபி, சுதாகர் இப்படியொரு வேலையை பார்த்திருக்கின்றனர் என குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

கிரவுட் ஃபண்டிங் சர்ச்சை: பரிதாபங்கள் கோபி, சுதாகர் படம் நடிக்கிறோம் என்கிற பெயரில் சுமார் 6 கோடி வரை கிரவுட் ஃபண்டிங் வாங்கி பல வருடங்களாக ஏமாற்றி வருவதாக பணம் கொடுத்தவர்கள் கொந்தளிக்க அவர்கள் மீது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஆனால், தாங்களே ஏமாந்து விட்டதாக தங்களின் வெப்சீரிஸ் ரிலீஸின் போது விளக்கம் அளித்திருந்தனர்.

கொட்டும் பணமழை: சினிமாவில் நடிக்கப் போவதாக அடுத்தடுத்து அறிவித்தாலும், யூடியூபில் அவர்கள் போடும் வீடியோவுக்குத்தான் மவுசு அதிகரித்து வருகிறது. அதிலும், தற்போது ஆணவக் கொலைக்கு எதிராக அவர்கள் ஒரு சாதியினரை அட்டாக் செய்து வெளியிட்ட வீடியோ பலருக்கும் பிடித்துப் போன நிலையில், ரூ. 100 முதல் ரூ. 1000 மற்றும் அதற்கு மேலும், கோபி, சுதாகருக்கு பொதுமக்கள் அன்பளிப்பாக பணத்தை வாரி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

30 வழக்கறிஞர்கள் வழக்கு: குரு பூஜை தொடர்பாக அந்த வீடியோவில் கோபி, சுதாகர் பேசிய நிலையில், தேவர் சமூகத்தை தான் அவர்கள் இழிவாக பேசுகின்றனர் என்று தயாரிப்பாளர் செளத்ரி கொந்தளித்து பேசிய நிலையில், தற்போது அந்த சமூகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கோபி, சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பரிதாபங்கள் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும் கோபி, சுதாகர் மற்றும் டிராவிட்டை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X