இந்தியன் 2 படத்தை வச்சு செய்த பரிதாபங்கள் கோபி, சுதாகர்.. மிமிக்ரி வர்மம் தான் செம ஹைலைட்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் இதுவரை வெளியான எந்தவொரு படமும் இந்த அளவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் மற்றும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து இருக்குமா? என்றால் அனைவரும் இல்லை என்று தான் சொல்வார்கள். நண்பன், ஐ மற்றும் 2.0 படங்கள் கூட ஓரளவுக்கு விமர்சனங்களை தான் சந்தித்தன. ஆனால், அந்த படங்களையும் பல ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், இந்தியன் 2 திரைப்படம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒன்றாக ஒரே குரலில் ட்ரோல் செய்யும் அளவுக்கு மாற்றி விட்டது. இயக்குநர் ஷங்கரிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்றும் இனியும் அவர் இயக்கும் படங்கள் மக்களை கவர வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.

சுஜாதா மறைவுக்குப் பிறகு ஷங்கர் படங்களில் வசனங்கள் கூட ரொம்பவே சுமார் மூஞ்சு குமாராகத்தான் இருக்கு என கலாய்த்து வரும் நிலையில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் புதிதாக வெளியாகி இருக்கும் ரவுடி பரிதாபங்கள் வீடியோவில் இந்தியன் 2வை பயங்கரமாக ட்ரோல் செய்துள்ளனர்.
பிக் பாஸ் முதல் இந்தியன் தாத்தா வரை: பரிதாபங்கள் யூடியூப் சேனலில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கமாக கலாய்த்து பல வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளன. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை தற்போது வேறலெவலில் ட்ரோல் செய்து கலாய்த்துள்ளனர். ரவுடி பரிதாபங்கள் என பாதி ரவுடி சீனும், மீதி இந்தியன் 2 படத்தின் காட்சிகளையும் கலாய்த்துள்ளனர்.
மிமிக்ரி வர்மா: இந்தியன் தாத்தாவாக கோபி போட்டு வந்திருக்கும் கெட்டப்பை பார்த்தாலே ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்கள். அந்தளவுக்கு பக்கவான லுக்கில் வந்த அவர் சுதாகருக்கு மிமிக்ரி வர்மா போட்டு தண்டனை கொடுக்கிறேன் என்கிற பெயரில் செய்யும் அலப்பறைகள் எல்லாம் தரமான சம்பவமாக உள்ளது.

ஹவுஸ் ஆஃப் டிராகன்: டிராவிட் செல்வத்துக்கு போடும் வர்மத்தால் அவர் ஹவுஸ் ஆஃப் டிராகன் போல மாறி நெருப்பெல்லாம் விட ஆரம்பிக்கிறார். இந்தியன் 2 படத்தில் குதிரை போல ஓடுவது போன்ற வர்மா போடப்பட்ட நிலையில், அனைத்து மிருகங்களின் பெயர்களையும் சொல்லி வர்மம் போடுவது போன்றும் அதெல்லாம் தங்களுக்கு எந்த எஃபெக்ட்டும் தரவில்லை என்றும் அவருக்கு யாரோ இந்தியன் தாத்தா வர்மம் போட்டு விட்டார்கள் அதான் இப்படி சுத்திக் கொண்டிருக்கிறார் என கலாய்க்கும் காட்சிகளை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
பயில்வான் ரங்கநாதன் பேச்சு: இந்தியன் 2 படம் நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்று தான் சொல்ல முடியும் என்றும் அதற்காக விமர்சகர்களை கோபித்துக் கொள்ளக் கூடாது என பயில்வான் ரங்கநாதன் வாஸ்கோடகாமா நிகழ்ச்சியில் பேசியதே ஏற்கனவே சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், கோபி சுதாகரும் இந்தியன் 2 படத்தை கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











