ஆத்தி.. சீக்கிரமே அப்பா பாவங்கள் வந்துடும் போல.. ஆண் குழந்தைக்கு அப்பாவான பரிதாபங்கள் சுதாகர்!
சென்னை: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான சுதாகர் ஆண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார். குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்த கோபி சுதாகர் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் பரிதாபங்கள் வீடியோவை வெளியிட்டு பிரபலமானார்கள். அதன் பின்னர் அங்கிருந்து இருந்து வெளியேறிய நிலையில் பரிதாபங்கள் என்றே தனியாக யூடியூப் சேனலை ஆரம்பித்தனர். தொடர்ந்து அந்த யூடியூப் சேனலில் காமெடி வீடியோக்களை கோபி மற்றும் சுதாகர் வெளியிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தனர்.

மீசைய முறுக்கு படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கோபி சுதாகர் விஜயின் மெர்சல், யாஷிகா ஆனந்த் நடித்த ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் காமெடியனாக சில காட்சிகளில் நடித்து ஸ்கோர் செய்தனர். இருவரும் இணைந்து ஹீரோவாக நடிக்கப் போவதாக ஆரம்பித்த முதல் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், இரண்டாவதாக தொடங்கிய புதிய படத்தை சமீபத்தில் நிறைவு செய்து விட்டதாக வீடியோ வெளியிட்டு இருந்தனர்.
கடந்த 2012ம் ஆண்டு துனியா சுதாகர் லக்ஷ்மி குமாரி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தற்போது அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார். குழந்தையுடன் எடுத்துக் கொண்ட அவரது புகைப்படத்தை பரிதாபங்கள் டீம் சோஷியல் மீடியாவில் வெளியிட சினிமா பிரபலங்கள் மற்றும் யூடியூப் ரசிகர்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
சுதாகரை தொடர்ந்து பரிதாபங்கள் கோபியும் கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவரும் சீக்கிரமே அப்பாவாக வாழ்த்துக்கள் என்றும் பரிதாபங்கள் யூடியூப் சேனல் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில், இரண்டாவது படத்தின் படப்பிடிப்பை முடித்த சந்தோஷத்தை கொண்டாடிய சுதாகர் தற்போது தனக்கு மகன் பிறந்துள்ள சந்தோஷத்தை தனது நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் கொண்டாடி வருகிறார்.
கோபி மற்றும் சுதாகர் யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை ஏகப்பட்ட பாவங்கள் வீடியோக்களை போட்டு வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் நிலையில், சமீபத்தில் வெஜிடேரியன் பாவங்கள் வீடியோ எல்லாம் வேறலெவலில் வியூஸை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே இவர்கள் நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











