கோபியையும் சுதாகரையும் பிரிக்க ஆள் வந்தாச்சு.. களைகட்டிய ‘பரிதாபங்கள்’ சுதாகர் நிச்சயதார்த்தம்!

சென்னை: 'பரிதாபங்கள்' சுதாகரின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் என ஏகப்பட்ட கலாட்டாக்காள் சுதாகர் நிச்சயதார்த்த விழாவில் நடைபெற்றுள்ளன.

சுதாகரின் இணை பிரியா நண்பரான கோபியும் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு சுதாகரை வாழ்த்தி கலாய்த்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

கோபி சுதாகர்

கோபி சுதாகர்

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் பரிதாபங்கள் எனும் தலைப்பில் வீடியோக்களை போட்டு காமெடி ரெட்டையர்களாக கலக்கி வந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் இருந்து விலகிய இவர்கள் பரிதாபங்கள் என தனியாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து பிரபலமானார்கள்.

 யூடியூப் டிரெண்டிங்

யூடியூப் டிரெண்டிங்

பேங்க் பரிதாபங்கள் தொடங்கி கொரோனா பரிதாபங்கள் வரை ஏகப்பட்ட பரிதாப வீடியோக்களை போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர். இவர்களின் வீடியோக்கள் வெளியான உடனே மில்லியன் கணக்கில் வியூக்களை அள்ளி யூடியூபில் டிரெண்டாகி விடும். சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் கோபி மற்றும் சுதாகருக்கு உள்ளனர்.

சினிமா பக்கம்

சினிமா பக்கம்

யூடியூப் பிரபலங்களும் சினிமாவில் சாதிக்க முடியும் என சினிமா பக்கம் களமிறங்கிய சில பேரில் இவர்களும் முக்கியமானவர்கள். மீசையை முறுக்கு, மெர்சல், ஜாம்பி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளனர். குரூப் ஃபண்டிங் மூலம் சுமார் 6.5 கோடி நிதி திரட்டி "மணி கம் டுடே, கோ டுமாரோ எனும் படத்தை ஆரம்பித்தனர். ஆனால், இன்னமும் அந்த படம் பல்வேறு காரணங்களால் நிறைவு பெறவில்லை. விரைவில் அந்த படம் எடுத்து முடிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

சுதாகர் நிச்சயதார்த்தம்

சுதாகர் நிச்சயதார்த்தம்

இந்நிலையில், சுதாகரின் சொந்த ஊரான சிவகாசியிலே அவருக்கு குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் சூழ கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மாப்பிள்ளை சுதாகர் நீல நிற பிளேசர் அணிந்து நிச்சயதார்த்தத்தில் மாலையும் கழுத்துமாக திருமண வாழ்க்கைக்குள் நுழைய தயாராகி விட்டார்.

கோபி இல்லாமலா

கோபி இல்லாமலா

சுதாகர் நிச்சயதார்த்தத்தில் அவருடைய நெருங்கிய நண்பரும் தொழில் பார்ட்னருமான கோபி இல்லாமல் இருப்பாரா? மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் சுதாகரை கிண்டல் செய்து கொண்டே இருப்பது போல பார்வையால் அவரை சிரிக்க வைத்துக் கொண்டே கோபி பண்ண அட்டகாசங்கள் எல்லாம் வேற லெவல் என்கின்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் பலரை சிரிக்க வைத்து வரும் சுதாகர் நிச்சயம் செய்து கொண்டதை அறிந்த ரசிகர்கள் விரைவில் திருமண வாழ்க்கையில் இணைந்து ஹேப்பியா இருங்க சுதாகர் என வாழ்த்தி வருகின்றனர். மேலும், கோபி சுதாகரை பிரிக்க சிவகாசியில் இருந்து ஒரு பெண் கிளம்பி வந்துட்டாங்க என்றும் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X